Posts

• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்.

Image
வேலூர்   மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட ம் . மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம் 532 கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு 182 பயனாளிகளுக்கு ரூ.35.21 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.                     வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதேமில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் தலைமையில்   நடைபெற்றது .                       மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா , பட்டா மாறுதல் , இலவச வீட்டு மனைப்பட்டா , முதியோர் உதவி தொகை வேளாண்மை துறை , காவல் துறை . ஊரக வளார்ச்சி துறை , நகராட்சி நிர்வாகங்கள் , பேரூராட்சி துறை , கூட்டுறவு கடனுதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார் பாக வீடுகள் வேண்டி , மின்சார துறை சார்பான குறைகள் , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை . மருத்துவ துறை , கிராம பொதுப்பிரச்சனைகள் , குடிநீர் ...

வசாயிகள் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரிபட்டை நாமம் போட்டு வாயில் கருப்பு துணி கட்டி நூதன ஆர்பாட்டம்

Image
 வேலூரில் ஆட்சியர் அலுவலகம் எதிரில் விவசாயிகள் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரிபட்டை நாமம் போட்டு வாயில் கருப்பு துணி கட்டி நூதன ஆர்பாட்டம்           வேலூர் சத்துவாச்சாரியில்  தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் மாநில பொது செயலாளர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது இதனை மாநில பொருளாளர் சுபாஷ் துவங்கி வைத்தார் இதில் ராமதாஸ்,அரிமூர்த்தி,வெங்கடேசன் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்  விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்வதாக தவெக தேர்தல் வாக்குறுதி அளித்தது ஆனால் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் விவசாயிகள் தமிழக அரசு ஏமாற்றுகிறது எனவே தமிழக அரசு உடனடியாக அனைத்து  பயிர் கடன் களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்    விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக்குறை உரவிலை உயர்வு கட்டுபடியாகாத விலை போன்ற சூழல்களிலும் விவசாயத்தை செய்து வருகிறோம் எனவே விவசாயத்தை காக்க பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரிநாமம் போட்டு வாயில் கருப்பு துணி கட்டி நூதன ஆர்பாட்டம் நடைபெற்றது ஆர்பாட்டத்தின் போது விவசாயி ஒருவர் மயங்கி விழு...

காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைச்சர் வி.காந்திராஜ் திறந்து வைத்தார்

Image
 காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைச்சர் வி.காந்திராஜ் திறந்து வைத்தார்  காட்பாடி, மே.31-   காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் வி.காந்திராஜ் திறந்து வைத்தார். காட்பாடி தொகுதியில் த.வெ.க வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டாக்டர் எம். சுதாகர். காட்பாடி காந்திநகர் 4வது கிழக்கு மெயின் ரோட்டில் காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் மக்களின் குறைகளை கேட்பதற்காக அலுவலகம் புதிய பொலிவுடன் சீரமைக்கப்பட்டு  திறப்பு விழா நேற்று நடந்தது. திறப்பு விழாவிற்கு காட்பாடி எம்.எல்.ஏ., டாக்டர் எம்.சுதாகர் தலைமை தாங்கினார்.   சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் வி.காந்திராஜ் கலந்து கொண்டு காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.    விழாவில் த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் நவீன், வேல்முருகன், எம்.எல்.ஏ.,க்கள் வினோத்கண்ணன், தென்றல்குமார், சிந்து, தொழிலதிபர்கள்  பி.கே.ஜி.மனோகரன், எம்.பத்மாவதி,  பி.கே.ஜி.செல்வராஜ், விஷ்ணு வந்தனா சுதாகர், த.வெ.க.,...

அ.ம.மு.க. வேலூர் மாநகர் மாவட்ட செயலாளராக சதீஷ்குமார் நியமனம்

Image
 அ.ம.மு.க. வேலூர் மாநகர் மாவட்ட செயலாளராக சதீஷ்குமார் நியமனம் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் காட்பாடி, மே.30-   அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேலூர் மாநகர மாவட்ட  செயலாளராக பிரம்மபுரத்தைச் சேர்ந்த பி.கே.ஆர்.சதீஷ்குமாரை கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நியமித்துள்ளார்.   அதைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் பி.கே.ஆர். சதீஷ்குமார் வேலூர் பழைய  மாநகராட்சி அருகே உள்ள அண்ணாசிலை, எம்.ஜி.ஆர். சிலை,  பெரியார் சிலை, மக்கான் அம்பேத்கர் சிலை, காட்பாடி ஓடைபிள்ளையார் பஸ் நிறுத்தம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை, சித்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைகளுக்கு நிர்வாகிகளுடன் சென்று நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.    நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட  செயலாளர்  ஏ.ஞானசேகர் முன்னிலை வகித்தார்.காட்பாடி மத்திய ஒன்றிய செயலாளர் பி.பாபு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர்கள்  வி.டி.தர்மலிங்கம், காட்பாடி எஸ்.ராஜா, வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் பூபாலன், மாவட்ட...

விலை உயர்வுக்கு ஏற்ப தனியார் பஸ் கட்டணத்தை முதலமைச்சர் உயர்த்த வேண்டும்

Image
 விலை உயர்வுக்கு ஏற்ப தனியார் பஸ் கட்டணத்தை முதலமைச்சர் உயர்த்த வேண்டும்                    வேலூர் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை    வேலூர், மே. 30-                      வேலூர் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்க முன்னாள் தலைவர் டாக்டர் விஜய கோவிந்தராஜன் கூறியதாவது;                       தமிழ்நாட்டில் பொதுமக்களுக்காக தனியார் பஸ் சேவை 100 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 1925ம் ஆண்டு தனியார் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே மிகக் குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு சேவை செய்யும் தொழில் என்றால் அது பஸ் தொழிலை கூறலாம். 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டீசல் விலை ரூ.67.23 ஆக உயர்ந்தது. அப்போது தனியார் பஸ் கட்டண உயர்வு ஒரு கிலோமீட்டருக்கு 42 பைசாவில் இருந்து 58 பைசாவாக உயர்த்தப்பட்டது. அதில் இருந்து இதுவரை தனியார் பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை.        ...

• வேலூர் கோட்டை ஜலகண்டீஸ்வரர் ஆலய பிரதோஷம்.

Image
·          வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம்.   ·          பக்தர்கள் ஹரோ ஹரா முழக்கங்களுடன் நந்தி பகவானை தரிசனம்.   ·          நந்தி பகவானுக்கு பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் – மஹாதீபாராதனை.          வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம் முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர் , சந்தனம் , தேன், கரும்பு சாறு, இளநீர் , பன்னீர் , திருநீறு உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.       பின்னர் அலங்காரங்களை செய்து மலர் மாலை, எலுமிச்சை மாலை , வில்வ இலைகள், அருகம்புல் மாலைகளால் அலங்காரங்கள் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் அரோகரா முழக்கங்களுடன்    பக்தர்கள்   நந்தி பகவானை வழிபட்டனர். பின்னர் சுவாமி உட்பிரகார உலா நடைபெற்றது. ...

• வேலூரில் ஈகை திருநாளாம் பக்ரீத் திருநாள்.

Image
·         வேலூரில் ஈகை திருநாளாம் பக்ரீத் திருநாள்.    ·         5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை.                       வேலூர் மாவட்டம் , வேலூர் ஆர் . என் . பாளையத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில் ஈகை திருநாளாம் பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவரை ஒருவர் கட்டி தழுவி வாழ்த்துகளை கூறி மகிழ்ந்தனர்.     ஈகை திருநாளான இன்று குர்பானி கொடுத்து உணவுகளை ஏழைகளுக்கு வழங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.     இதேபோன்று மாவட்டத்தில் பள்ளிகொண்டா , பேர்ணாம்பட்டு , குடியாத்தம் ஆகிய பகுதிகளிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.