Posts

• இராணிப்பேட்டை காவல் குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு.

Image
 ·         இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வு       இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாளை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே.சிபின் தலைமையில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (Anti–Child Labour Day) உறுதிமொழி எடுக்கப்பட்டது .       இதில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் குமார் , மற்றும் வெங்கடகிருஷ்ணன் , காவல் அதிகாரிகள் , ஆளினர்கள் , அமைச்சு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .       மேலும் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் மற்றும் ஆயுதப்படை தலைமையகத்திலும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.          

• இராணிப்பேட்டை சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை.

Image
 ·         இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை .       இராணிப்பேட்டை மாவட்டத்தில் , இரண்டு உதவி ஆய்வாளர்கள் மற்றும் நான்கு காவலர்களை கொண்ட " சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை ” துவக்கி வைக்கப்பட்டது .       இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையில் உள்ள அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு செயல்படுவர் . மேலும் மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள் , கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பெண்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர் .  

• இராணிப்பேட்டை மாவட்ட காவல் குறைதீர்வு கூட்டம்.

Image
·         இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை வாரந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்.       இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே . சிபின் தலைமையில் நடைபெற்றது .           இக்குறை தீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 33 மனுக்கள் பெறப்பட்டன . மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார் .  

• இராணிப்பேட்டை காவல் பறிமுதல் வாகனங்கள் ஏலம்.

Image
 ·         இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 18 வாகனங்கள் பொது ஏலம்.         இராணிப்பேட்டை மாவட்டம், மது விலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினரால் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கான பொது ஏலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே . சிபின் தலைமையில் நடைபெற்றது .       இந்த ஏலத்தில் ஒரு நான்கு சக்கர வாகனம் , ஒரு மூன்று சக்கர வாகனம் மற்றும் 16 இரு சக்கர வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டு மொத்தம் ரூ. 5,35,130/- அரசுக்கு ஆதாயமாக பெறப்பட்டது .  

• இராணிப்பேட்டை ரூ.12.6 லட்சம் மதிப்பு 107 செல்போன்கள் மீட்பு.

Image
 ·         இராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ .12.6 லட்சம் மதிப்புள்ள 107 செல்போன்கள் மீட்பு    ·         காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு              இராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன்கள் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே . சிபின் உத்தரவின் பேரில் தனிப்படை மற்றும் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் துரித நடவடிக்கைகள் மேற்கொண்டனர் .       இதன் தொடர்ச்சியாக , காணாமல் போன செல்போன்களின் IMEI எண்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப நடவடிக்கையின் மூலம் ரூ .12.6 லட்சம் மதிப்புள்ள 107 செல்போன்கள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டன . மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில்   மீட்கப்பட்ட செல்போன்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன...

• வேலூர் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

Image
·         வேலூர் மாவட்ட   வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த   ஆய்வு கூட்ட ம் - 213 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 64 இலட்சத்து 29 ஆயிரத்து 955 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் வழங்கினார்.                  வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் ம.விஜய்பாலாஜி தலைமையில், வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி 213 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 64 இலட்சத்து 29 ஆயிரத்து 955 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.                 ஆய்வு கூட்டத்தில் வருவாய் துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் உழ...

• பிச்சனூர் கைத்தறி பூங்கா - அமைச்சர் ஆய்வு.

Image
·         பிச்சனூர் பகுதியில் அமைந்துள்ள சிறிய அளவிலான கைத்தறி பூங்கா - கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.                  வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், பிச்சனூர் பகுதியில் அமைந்துள்ள சிறிய அளவிலான கைத்தறி பூங்காவை கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் ம.விஜய்பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கைத்தறி நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு துணி ரகங்களை பார்வையிட்டார். மேலும் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட தேசியக் கொடியை பார்வையிட்டார். பின்னர் மாண்புமிகு கைத்தறி தொழிலுள் மற்றும் கதர் துறை அமைச்சர் நெசவாளர்களிடம் கலந்துரையாடி கைத்தறி பூங்காவில் பணியாற்றி கொண்டிருந்த நெசவாளர்களிடம் அவர்களுக்கு வழங்கப்படும் கூலி மற்றும் இதர தேவைகள் குறித்து கேட்டறிந்தார் .   வேலூர் மாவட்டம் , குடியாத்தம் வட்டம் , பிச்சனூர் பகுதியில் சிங்காரவேலர் தொழி லாள ர் நெசவாளர் கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் ச...