• வேலூர் மாநகராட்சியில் நகராட்சி நிர்வாகம் கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு.
· நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் வேலூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப்சிங்பேடி வேலூர் மாநகராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் குழாய் பாலம் அமைக்கும் பணி, பயோமைனிங் முறையில் குப்பைகளை அகற்றும் பணி, திடக்கழிவு மேலாண்மை மையத்தில் குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் வேலூர் மாநகராட்சி, சர்க்கார்தோப்பு பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து வேலூர் மாநகராட்சி, காகிதப்பட்டறை முதல் விருதம்பட்டு வரை கழிவுநீர் குழாய் எடுத்து செல்வதற்கான பாலம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பணிகளை தொய்வின்றி விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து...