Posts

• மது போதையில் தந்தையை கொலை செய்த மகன் கைது.

Image
·          மது போதையில் தந்தையை கத்தியால் வெட்டிகொலை செய்த மகன் கைது              வேலூர் மாவட்டம் , வேலூர், சலவன்பேட்டை, அம்மனாங்குட்டை ரோடு பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (70). இவர் தச்சு தொழிலாளி. இவரது மகன் புறா ( எ ) சக்திவேல் (40). இவரும் தந்தையுடன் தச்சுவேலை செய்து வருகிறார்.       தந்தை, மகன் இருவரும் மது அருந்துவது பழக்கம். இந்த நிலையில் இருவரும் மது அருந்தும்போது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மது போதையில் இருந்த சக்திவேல் தந்தையை கத்தியால் வெட்டி கொலை செய்தார்.   பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி அருகிலிருந்து காணாற்றின் ஓரம் படுத்து தூங்கிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்த சக்திவேலை கைது செய்தனர்.   ...

• பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம்.

·         வேலூர் மாவட்ட விவசாயிகள் காரீப் பருவ பயிர்களை பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் .                 வேலூர் மாவட்டத்தில் 2026-2027- ஆம் ஆண்டுக்கு பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்வதற்கு KSHEMA நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது .   இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள் , அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம் . கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் தொடக்க   வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் , பொதுத் துறை வங்கிகள் , அரசு பொது சேவை மையங்களில் உரிய கட்டணத் தொகையை செலுத்தி பயிர்க் காப்பீடு செய்து கொள்ளலாம் .                 நெல் பயிரை காப்பீடு செய்வதற்கு பிரீமிய...

• வேலூரில் செய்தியாளர்கள் ஆர்பாட்டம்.

Image
 ·          செய்தியாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் செய்தியாளர்கள் ஆர்பாட்டம்.              வேலூர் மாவட்டம் , வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அனைத்து நாளிதழ் மற்றும் அனைத்து தொலைக்காட்சி செய்தியாளர்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.     சோளிங்கரில் செய்தி சேகரிக்க சென்ற தினகரன் நாளிதழ் செய்தியாளர் அரங்கநாதன் மற்றும் தினமலர் நாளிதழ் செய்தியாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் மீது , தவெக சட்டமன்ற உறுப்பினர் கபில் , அவரது தம்பி மற்றும் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காயமடைந்த இரு செய்தியாளர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .              இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து திரளான செய்தியாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பல்வேறு கோஷங்களை எழுப்ப...

• கிருஷ்ணசாமி சீனியர் செகண்டரி பள்ளி இன்ட்ராக்ட் சங்கம்.

Image
·          கிருஷ்ணசாமி சீனியர் செகண்டரி பள்ளியில் இன்ட்ராக்ட் சங்கம் தொடக்க விழா - விழிப்புணர்வு ஊர்வலம் .       வேலூர் , வேலூர் வள்ளல் ந . கிருஷ்ணசாமி முதலியார் சீனியர் செகண்டரி பள்ளியில் அக்கார்டு ரோட்டரி   சங்கத்தின் சார்பில் இன்ட்ராக்ட் சங்கம் தொடக்க விழா நடந்தது .         விழாவிற்கு பள்ளி தாளாளரும் , ரோட்டரி மாவட்ட ஆளுநராக தேர்வு செய்யப்பட்டுள்ள த . சிவக்குமார் தலைமை தாங்கி பேசினார் . பள்ளி முதல்வர் ஆர் . ஜி . சுஜாதா முன்னிலை வகித்தார் .       சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் வி . சுரேஷ் கலந்து கொண்டு இன்ட்ராக்ட் சங்க நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் . அதைத்தொடர்ந்து பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது . முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு நாளை முன்னிட்டு   பள்ளி மாணவ , மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது .       விழாவில் அக...

• வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திட்ட பணிகள் ஆய்வு.

Image
·         வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் பேர்ணாம்பட்டு, குடியாத்தம் மற்றும் அணைக்கட்டு   பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு. வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மரு.ச.உமா, வேலூர், பேர்ணாம்பட்டு, குடியாத்தம் மற்றும் அணைக்கட்டு   பகுதிகளில் ஒருங்கிணைந்த   மறுவாழ்வு சேவை மையம், சாலை பணிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் ஆகிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மரு.ச.உமா, பேர்ணாம்பட்டு கோட்ட அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அடிப்படை வசதிகள், பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கை, உபகரணங்கள், மறுவாழ்வு மையத்தில் வழங்கப்பட உள்ள சேவைகள் குறித்தும், மாற்று திறனாளிகள் அணுகும் வகையில் ஒருங்கிணைந்த மையம் அமைந்துள்ளதா எனவும்   கேட்டறிந்தார். தொடர்ந்து வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு நகராட்சி, வார்டு எண்.17...