Posts

• ஸ்ரீபுரம் பொற்கோயிலில் சித்த மருத்துவர்களுக்கு பாராட்டு.

Image
·          சித்த மருத்துவம் இந்தியாவின் தொன்மையையும் கலாச்சாரத்தையும் உலக அளவில் பறைசாற்றுகிறது.   ·          உலக சுகாதார நிறுவனமே நமது பாரம்பரிய மருந்துகளை கண்டு வியந்து பாராட்டியுள்ளனர்.   ·          ஸ்ரீபுரம் பொற்கோயில் வளாகத்தில் 108 பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றுகள் வழங்கி இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி நீதியரசர் அரவிந்த்குமார் பேச்சு.              வேலூர் மாவட்டம் , ஸ்ரீபுரம், பொற்கோயில் வளாகத்தில் பொற்கோயில் நிறுவனர் சக்தியம்மா தலைமையில் 108 பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு பாரம்பரிய, தன்னலமற்ற மருத்துவ சேவையை பாராட்டி சான்றுகள் வழங்கி கௌரவிக்கும் விழாவானது நடைபெற்றது.              இவ்விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் மற்றும் திரளான பாரம்பரிய சித்த மருத்துவர்களும்...

• திருவள்ளூவர் பல்கலைகழக தொழிலாளர்கள் கண்டன ஆர்பாட்டம்.

Image
·          திருவள்ளூவர் பல்கலைகழக பாலியல் சீண்டல்களை கண்டித்து பல்கலைகழக தொழிலாளர்கள் சங்கம் மூன்று நாட்கள் கண்டன ஆர்பாட்டம் துவக்கம்.       வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே சேர்க்காட்டில் தமிழக அரசின் திருவள்ளூவர் பல்கலைகழகம் செயல்படுகிறது. இதன் கட்டுப்பாட்டில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 80 -க்கும் மேற்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன.       இப்பல்கலைகழகத்தில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் தொடர்கிறது. சில தினங்களுக்கு முன்னர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆய்வக பொறுப்பாளர் கைது செய்யப்பட்டார்.       இங்கு அமைக்கப்பட்டுள்ள உள்ளக விசாரணை குழு பாலியல் புகார்களை மூடி மறைக்கவே முழுமையாக செயல்படுகிறது. இதற்கு முழு பொறுப்பாக உள்ள தேர்வு கட்டுபாட்டு அலுவலர் பாபுஜனார்த்தனம் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பாலியல் சீண்டலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் திருவள்ளூவர் பல்கலைகழக தொழிலாளர் சங்கம் தலைவர்...

• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்.

Image
·         வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட ம் - மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம் 562     கோரிக்கை மனுக்களைப் பெற்றார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில்   நடைபெற்றது . மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா , பட்டா மாறுதல் , இலவச வீட்டு மனைப்பட்டா , முதியோர் உதவி தொகை வேளாண்மை துறை , காவல் துறை , ஊரக வளார்ச்சி துறை , நகராட்சி நி ரு வாகங்கள் , பேரூராட்சி துறை , கூட்டுறவு கடனுதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார் பாக வீடுகள் வேண்டி , மின்சார துறை சார்பான குறைகள் , மாற்றுத்திறனாளிகள் நல துறை . மருத்துவ துறை , கிராம பொதுப்பிரச்சனைகள் , குடிநீர் வசதி , வேலை வாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 562 மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளிடமிருந்து பெற்று கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீத...

• முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் கல்லூரியில் சேர Eligiblity Certificate.

·         முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் 2026-2027 கல்வி ஆண்டில் கல்லூரியில் சேர Eligiblity Certificate பெற்று பயனடையுமாறு வேலூர் மாவட்ட ஆட் சி தலைவர் தெரிவித்துள்ளார்.        2026-2027-ஆம் கல்வி ஆண்டிற்கு கல்லூரி சேர்க்கையின் போது முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கேந்திரிய சைனிக் போர்டு (KSB) இணையதளத்தில் MBBS/BDS மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு KSB வாயிலாக விண்ணப்பித்திட படை விலகல் சான்றில் தமிழ்நாடு முகவரியை கொண்ட வேலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் கைம்பெண்கள் 2026-2027-ஆம் ஆண்டிற்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல், +2 மதிப்பெண் சான்று, படை விலகல் சான்று அடையாள அட்டை, PPO நகல் ஆதார் அட்டை நகல், மாணவரின் புகைப்படம் மற்றும் NEET தேர்வு முடிவு சீட்டு ஆகியவற்றுடன் வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகி Eligiblity Certificate பெற்று பயனடையுமாறும்,   கடந்த ஆண்டு பெற்ற சார்ந்தோர் சான்றினை பயன்படுத்த கூடாது எனவும் வேலூர் மாவட்ட ஆட் சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

• வேலூரில் ஆடிபெருக்கு தினம்.

Image
 ·          வேலூரில் ஆடிபெருக்கு - ஸ்ரீ கங்கா பாலாறு ஈஸ்வரர் பஞ்சபூத மஹாயாகம் மற்றும் அபிஷேகம்.   ·          பக்தர்கள் தங்கள் கைகளாலேயே பாலாறு ஈஸ்வரர் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தனர்.               வேலூர் மாவட்டம் , வேலூர், கோட்டையிலுள்ள ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி சமேத ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ கங்கா பாலாறு ஈஸ்வரருக்கு ஆடிபெருக்கு தினமான இன்று   25 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பஞ்சபூத மஹா யாகம் , பூர்ணாஹூதி நடைபெற்றது.       தொடர்ந்து கோ பூஜையும், கலசாபிஷேகமும் நடந்தது. மழை வளம் பெருகி நீர் வளம் பெருகவும், தண்ணீர் பஞ்சம் முற்றிலும் நீங்கவும், கூட்டு பிரார்த்தனையுடன் இந்த அபிஷேகம் நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஸ்ரீ கங்கா பாலாறு ஈஸ்வரருக்கு தங்கள் கைகளாலேயே பாலாபிஷேகம் செய்தனர்.  

• வேலூர் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி.

Image
·          வேலூர் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி.   ·          ஸ்ரீ விநாயக பெருமானுக்கு பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் - வெள்ளிக்கவசம் அணிவித்து மகாதீபாராதனை.           வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ விநாயக பெருமானுக்கு பால் , தயிர் , சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.       பின்னர் ஸ்ரீ விநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை, மலர் மாலைகள் அணிவித்தும் வெள்ளி கவசத்துடன் சிறப்பு அலங்காரங்களை செய்து மகாதீபாராதனைகளும் நடைபெற்றது.          இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சாமி உட்பிரகார உலா வந்தது.  

• வேலூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இலட்சினை உலக சாதனை நிகழ்வு .

Image
வேலூர் நகராட்சி 1.8.2008 அன்று முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருவதை முன்னிட்டு அதனை பெருமைப்படுத்தும் விதமாக 1,558 தூய்மை பணியாளர்களைக் கொண்டு Triumph World Record - நிறுவனத்துடன் இணைந்து மாநகராட்சியின் இலட்சினையாக ( Logo) மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் தூய்மை பணியாளர்கள் நின்ற உலக சாதனை நிகழ்வு   நடைபெற்றது. வேலூர் நகராட்சி 1.8.2008 அன்று முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருவதை முன்னிட்டு அதனை பெருமைப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில் 1,558 தூய்மை பணியாளர்களைக் கொண்டு Triumph World Record - நிறுவனத்துடன் இணைந்து வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் மாநகராட்சியின் இலட்சினையாக ( Logo) தூய்மை பணியாளர்கள் நின்ற உலக சாதனை நிகழ்வு   நடைபெற்றது. வேலூர் மாநகராட்சியானது 1866- ஆம் ஆண்டு முதல் நகராட்சியாக செயல்பட்டு வந்து கடந்த 01.08.2008- ம் ஆண்டு முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான எண்ணற்ற சேவைகளை செய்து ...