• அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
· அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய ப் பகுதிகளில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு. வேலூர் மாவட்ட ம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அமிர்தி உயிரியல் பூங்கா, நாற்றங்கால் பண்ணை, அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட தொடக்க பள்ளி, அங்கன்வாடி மையம், நியாய விலை கடை ஆகிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார். வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் அணைக்கட்டு தாலுக்கா, அமிர்தி ஊராட்சியில் உள்ள அமிர்தி உயிரியல் பூங்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பூங்கா பராமரிப்பு, விலங்குகள் மற்றும் பறவைகளின் பராமரிப்பு, உணவு, நீர், கால்நடை மருத்துவம் முதலியவற்றை கேட்டறிந்தார். சிறுவர்கள் விளையாட்டு பூங்கா, பார்வையாளர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள், ஓய்வு கூடம், மேம்படுத்தப்பட்ட கழிப்பறைகள், வன கால்நடை மருத்துவமனை, ஒலி – ஒளி அரங்கம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஊர்வன இருப்பிடம் போன்ற முக்கிய உட்கட்டமைப்பு பணிகளை பார...