Posts

• கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி.

Image
·          கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி - போக்குவரத்து பாதிப்பு.             வேலூர் மாவட்டம் , வேலூர், புதிய பேருந்து நிலையம் அருகே சென்னை - பெங்களூர் மேம்பாலத்தில் சென்னையிலிருந்து ஆம்பூருக்கு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கார் அதிக வேகமாக சென்றது. அது சாலையை கடக்க முயன்றவர் மீது மோதியதில் முதியவர் இழுத்து செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.     இந்த விபத்தினால் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் மெக்கானிக் என தெரிய வருகிறது. காரில் வந்தவர்கள் தப்பி சென்றனர்.       இந்த விபத்து காரணமாக வாகனங்கள் 5 கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ...

• சிறை கைதிகளுக்கு நல்ல உணவை அளிக்க வேண்டும்.

Image
·          சிறைகளில் நீதிபதிகள் ஆய்வின்போது உணவு சரியில்லை என சிறை கைதிகள் புகார் .   ·          சிறை கைதிகளுக்கு நல்ல உணவை அளிக்க வேண்டும் .   ·          சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தின் பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கி தெலுங்கானா சிறை துறை ஐ . ஜி . முரளிபாபு பேச்சு.           வேலூர் மாவட்டம் , தொரப்பாடியில் உள்ள சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தில் 35 - வது பட்டமளிப்பு விழா சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தின் இயக்குநர் பிரதீப் தலைமையில் நடைபெற்றது.       இதில் தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சிறை துறை அதிகாரிகள் பயிற்சிகளை முடித்து பட்டங்களை பெற்றனர். அவர்களுக்கு தெலுங்கானா சிறை துறை ஐ . ஜி முரளிபாபு பட்டங்கள் , பதக்கங்களை வழங்கினார். இவ்விழாவில் திரளான சிறை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.   ...

• ஆற்காடு நகர காவல் நிலையத்தில் ஆய்வு.

Image
 ·          ஆற்காடு நகர காவல் நிலையத்தில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு.    இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே . சிபின் , இராணிப்பேட்டை உட்கோட்டத்திற்குட்பட்ட ஆற்காடு நகர காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் .              காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் வழக்கு கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் . மேலும் , காவல் நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார் .        இந்நிகழ்வின்போது , இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கனகராஜ் , காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் உடனிருந்தனர் .  

• வேலூர் விஐடி பல்கலைகழக 41-வது பட்டமளிப்பு விழா.

Image
·          இந்தியாவை ' செயற்கை நுண்ணறிவை உருவாக்குபவராக ' மாற்ற வேண்டும் - தில்லி முதல்வர் ரேகா குப்தா வேண்டுகோள்.   ·          வேலூர் விஐடி பல்கலைகழகத்தில் 41 - வது பட்டமளிப்பு விழா.       வேலூர் :   இந்தியாவை ' செயற்கை நுண்ணறிவை உருவாக்குபவராக ' மாற்ற வேண்டும் என தில்லி முதல்வர் ரேகாகுப்தா வேண்டுகோள் விடுத்தார் .       வேலூர் விஐடி பல்கலைகழகத்தில் 41 - வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.       விஐடி வேந்தர் கோ . விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக தில்லி முதல்வர் ரேகாகுப்தா கலந்து கொண்டு மாணவ , மாணவிகளுக்கு பட்ட சான்றிதழ்களை வழங்கி   பேசியதாவது :       அரசும் , பட்டதாரிகள் இணைந்து செயல்பட்டால் பல சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும் . தில்லி நகரம் சந்திக்கும் மாசு , போக்குவரத்து , கழிவு மேலாண்மை போன்ற பிரச்சனைகளை தீர்க்க ஐஐடி-யுடன்...