Posts

• வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை 1,600 விநாயகர் சிலைகள்.

Image
 ·          வேலூர் , ராணிப்பேட்டை , திருப்பத்தூர் , திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 1,600 பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு    ·          இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் மகேஷ் வேலூரில் பேட்டி .                வேலூர் மாவட்டம் , வேலூர், சத்துவாச்சாரியில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை கூட்டம் இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் விநாயகர் சதுர்த்தி குழுவினர் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.          பின்னர் இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், 44- ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் முழுவதும் நடக்கிறது இந்த விழா கடந்த ஆட்சி காலத்தில் அதிமுக, திமுக மாறி மாறி ஆட்சி செய்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட பல்வேறு தடைகள் நீதிமன்ற...

• வேலூரில் முதுகு தண்டுவட மாற்று திறனாளர் விழிப்புணர்வு ஊர்வலம்.

Image
·          வேலூரில் முதுகு தண்டுவட காயத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து மாற்று திறனாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம்.  ·          மக்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் - ஆட்சியர் லீலா அலெக்ஸ் பேச்சு.              வேலூர் மாவட்டம் , வேலூர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சி . எம் . சி மருத்துவமனை சார்பில், ஊரீசு கல்லூரியிலிருந்து உலக தண்டுவட காயத்தால் பாதித்தோர் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தினை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்ணா துவங்கி வைத்தார்.       இதில் திரளான முதுகு தண்டுவட காயத்தால் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளர்கள் மூன்று சக்கர வாகனங்களில் பங்கேற்று முதுகு தண்டுவடத்தை பாதுகாப்போம் என விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் முழக்கங்களை எழுப்பியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த ஊர்வ...

• செப்டம்பர்-2026 வேலூர் மாவட்ட மனுநீதி நாள் முகாம்.

செப்டம்பர் -2026   மாதத்திற்கான வேலூர் மாவட் ட மனுநீதி நாள் முகாம் . காட்பாடி   வ ட்டம் ,   சேர்க்காடு   கிராமத்தில் 09.09.2026 அன்று   நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சி தலைவர் .                         வேலூர் மாவட்டத்தில் செப்டம்பர் – 2026 மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் காட்பாடி வட்டம் , திருவலம் உள்வட்டம் , சேர்க்காடு கிராமத்தில் 09.09.2026   ( புதன்கிழமை ) காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது . மேற்படி மனுநீதி நாள் முகாம் நடைபெறும் வளாகத்தில் அரசு துறையின் செயல்பாடுகள் மற்றும் நலத்திட்டங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளம்பர பதாகைகள் மற்றும் காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளது .                  பொதுமக்கள் தங்களது தொலைபேசி எண் மற்றும் ஆதார் எண்களை குறிப்பிட்டு உரிய ஆவணங்களுடன் ...

• காகிதபட்டறை ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம்.

Image
 ·          காகிதபட்டறை ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் .              வேலூர் மாவட்டம் , வேலூர், காகிதப்பட்டறையில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ கிருஷ்ணர் ராதா ருக்மணி ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்களை செய்து சிறப்பு அலங்காரங்களை செய்து மலர் மாலைகள் துளசி மாலைகளால் அலங்காரங்களை செய்து ஸ்ரீ கிருஷ்ணர் ராதா ருக்மணிக்கு வெள்ளி கிரீடம் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.