Posts

• ஊரீசு கல்லூரி பாதுகாப்புவியல் துறை 50-ம் ஆண்டு விழா.

Image
·          போர் நடத்தும் அமெரிக்கா , ரஷ்யா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளால் மக்களும் குழந்தைகளும் பாதிக்கபடுவதற்கு கண்டனம் - தென்னிந்திய திருச்சபை பேராயர் சர்மா நித்யானந்தம் பேச்சு.    ·          அதிகாரத்துவம் ,  ஆசை ஆகியவைகளால்தான் உலக போர் உள்ளிட்டவைகள் நடந்தது - முன்னாள் விமான படை தளபதி மாதேஸ்வரன் பேச்சு.  ·          ஊரீசு கல்லூரியின் பாதுகாப்புவியல் துறையின் 50- ம் ஆண்டு விழா கருத்தரங்கு.              வேலூர் மாவட்டம் , வேலூரில் புகழ் பெற்ற மிகவும் பழமையான ஊரீசு கல்லூரியில் பாதுகாப்புவியல் துறையின் 50- ம் ஆண்டு விழாவினை முன்னிட்டு “ இன்றைய காலகட்டத்தில் போர்களும் புதிய உலகின் எதிர்பார்ப்பும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் தென்னிந்திய திருச்சபையின் பேராயர் சர்மா நித்யானந்தம் தலைமையில் நடைபெற்றது.         ...

• TAMCO கடன் மேளா முகாம்கள்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) மூலம் சிறுபான்மையின மக்களுக்கு வழங்கப்படும் கடன் திட்டங்கள் - 2026-2027, சிறுபான்மையின மக்கள் அதிகம் வசிக்கும் இடங்கள், மசூதி, சர்ச், அரசு சமுதாய கூடம் மற்றும்   திருமண மண்டபங்களில் கடன் மேளா முகாம்கள்   நடைபெறவுள்ளது   - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் . சிறுபான்மையின மக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது.   இத்திட்டத்தின் கீழ் வியாபாரம் செய்யவும், தொழில் தொடங்கிடவும் அல்லது ஏற்கனவே செய்து வரும் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் தனிநபர் கடன், குழு கடன், விராசத் கடன் மற்றும் கல்வி கடன் வழங்கப்படுகிறது, அதன் விவரம் பின்வருமாறு :   வ. எண் திட்டம் தகுதி தேவைப்படும் சான்றுகள் 1. தனிநபர் கடன் 1. விண்ணப்பதாரர் சிறுபான்மையின மதத்தினராக இருத்தல் வேண்டும். 2. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். ...

• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்.

Image
வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட ம் - மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம் 637   கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.   வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தலைமையில்   நடைபெற்றது . மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா , பட்டா மாறுதல் , இலவச வீட்டு மனைப்பட்டா , முதியோர் உதவி தொகை வேளாண்மை துறை , காவல் துறை , ஊரக வளார்ச்சி துறை , நகராட்சி நி ரு வாகங்கள் , பேரூராட்சி துறை , கூட்டுறவு கடனுதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார் பாக வீடுகள் வேண்டி , மின்சார துறை சார்பான குறைகள் , மாற்று திறனாளிகள் நலத்துறை . மருத்துவ துறை , கிராம பொதுப்பிரச்சனைகள் , குடிநீர் வசதி , வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 637 மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளிடமிருந்து பெற்று கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு...

• ஸ்ரீபுரம் தங்க கோவில் சார்பில் ரூ.2 கோடி உயர்கல்வி உதவி தொகை.

Image
·         தமிழகத்தில் 6 விமான நிலையங்களை   கூடுதலாக உருவாக்கியுள்ளோம் . ·         தமிழகம் செமி-கண்டக்டர் சிப்கள் உற்பத்தியிலும் செல்போன் தயாரிப்பு உற்பத்தியிலும் முன்னிலை . ·         தமிழகத்திற்கு கூடுதலாக மருத்துவக்கல்லூரிகளை வழங்கியுள்ளோம். ·         2047- ல் இந்தியா வல்லரசாக மாறும். -     மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை இணைஅமைச்சர் கிஷன்ரெட்டி ஸ்ரீபுரம் தங்க கோவில் சார்பில் ரூ . 2 கோடி உயர்கல்வி உதவி தொகைகளை மாணவர்களுக்கு வழங்கி பேச்சு.            வேலூர் மாவட்டம் , ஸ்ரீபுரம், ஸ்ரீ நாராயணி பீடத்தில் பொற்கோயில் சார்பில் பொற்கோயில் நிறுவனர் சக்தி அம்மா தலைமையில் வித்யா நேத்ரம் திட்டத்தில் ஏழை மாணவர்கள் 800 மாணவ , மாணவிகளுக்கு ரூ . 2 கோடி உயர் கல்வி பயில உதவிதொகை வழங்கும் விழாவானது நடைபெற்றது. இதனை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க...