• ஊரீசு கல்லூரி பாதுகாப்புவியல் துறை 50-ம் ஆண்டு விழா.
· போர் நடத்தும் அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளால் மக்களும் குழந்தைகளும் பாதிக்கபடுவதற்கு கண்டனம் - தென்னிந்திய திருச்சபை பேராயர் சர்மா நித்யானந்தம் பேச்சு.
· அதிகாரத்துவம், ஆசை ஆகியவைகளால்தான் உலக போர் உள்ளிட்டவைகள் நடந்தது - முன்னாள் விமான படை தளபதி மாதேஸ்வரன் பேச்சு.
· ஊரீசு கல்லூரியின் பாதுகாப்புவியல் துறையின் 50-ம் ஆண்டு விழா கருத்தரங்கு.
வேலூர் மாவட்டம், வேலூரில் புகழ் பெற்ற மிகவும் பழமையான ஊரீசு கல்லூரியில் பாதுகாப்புவியல் துறையின் 50-ம் ஆண்டு விழாவினை முன்னிட்டு “இன்றைய காலகட்டத்தில் போர்களும் புதிய உலகின் எதிர்பார்ப்பும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் தென்னிந்திய திருச்சபையின் பேராயர் சர்மா நித்யானந்தம் தலைமையில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் ஊரீசு கல்லூரியின் முதல்வர் ஆனி கமலா பிளாரன்ஸ் மற்றும் பாதுகாப்புவியல் துறை தலைவர் திருமாறன் உள்ளிட்டோரும் பாதுகாப்புவியல் துறையில் பயிலும் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் விமான படை தள்பதி மாதேஸ்வரன் கலந்து கொண்டார்.
இக்கருத்தரங்கில் தென்னிந்திய திருச்சபை பேராயர் சர்மா நித்யானந்தம் பேசுகையில்,
உலகின் போர்களுக்கு தற்போது காரணம் அமெரிக்க அதிபர் டோனால்டு டிரம்ப்தான். போர்கள் என்பது தேவையற்ற ஒன்று. இதனால் அமைதியில்லாமல் போகும். குழந்தைகளும் போரினால் பாதிக்கப்படுகின்றனர். கொல்லபடுகின்றனர். போரில்லா அமைதியான உலகை படைக்க மாணவ, மாணவிகளாகிய நீங்கள் ஆளுக்கொரு மரம் நடுங்கள். போர் நமக்கு தேவையில்லாதது. அமைதியே தேவையான ஒன்று. அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு கண்டனங்களை தெரிவிக்கிறோம். போரை கைவிடுங்கள் என பேசினார்.
இக்கருத்தரங்கில் முன்னாள் விமான படை தளபதி மாதேஸ்வரன் பேசுகையில்,
உலக போர்களால் மாமன்னர்கள் எல்லாம் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்களும் கொல்லப்பட்டனர். இதன் நோக்கம் மற்ற நாடுகளின் வளங்களை அடைவதும், அதிகாரத்துவம், அனைவரையும் கட்டுப்படுத்தும் ஆசை ஆகியவைகளால்தான் போர்கள் நடந்தது. நாடுகளில் மாநிலங்கள் உருவான பின்னர் சட்ட திட்டங்கள் மாறியது. நாடுகளுக்கான உரிமை, சர்வதேச உரிமை போன்றவைகளும் அமைக்கப்பட்டது. ஆனால் உலக போர்களில் பல நாடுகளின் மாமன்னர்கள் கொல்லப்பட்டனர். அதனால்தான் உலக போர்கள் நடந்தது என விளக்கி பேசினார்.

Comments
Post a Comment