• ஸ்ரீபுரம் தங்க கோவில் சார்பில் ரூ.2 கோடி உயர்கல்வி உதவி தொகை.
· தமிழகத்தில் 6 விமான நிலையங்களை கூடுதலாக உருவாக்கியுள்ளோம்.
· தமிழகம் செமி-கண்டக்டர் சிப்கள் உற்பத்தியிலும் செல்போன் தயாரிப்பு உற்பத்தியிலும் முன்னிலை.
· தமிழகத்திற்கு கூடுதலாக மருத்துவக்கல்லூரிகளை வழங்கியுள்ளோம்.
· 2047-ல் இந்தியா வல்லரசாக மாறும்.
- மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை இணைஅமைச்சர் கிஷன்ரெட்டி ஸ்ரீபுரம் தங்க கோவில் சார்பில் ரூ.2 கோடி உயர்கல்வி உதவி தொகைகளை மாணவர்களுக்கு வழங்கி பேச்சு.
வேலூர் மாவட்டம், ஸ்ரீபுரம், ஸ்ரீ நாராயணி பீடத்தில் பொற்கோயில் சார்பில் பொற்கோயில் நிறுவனர் சக்தி அம்மா தலைமையில் வித்யா நேத்ரம் திட்டத்தில் ஏழை மாணவர்கள் 800 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2 கோடி உயர் கல்வி பயில உதவிதொகை வழங்கும் விழாவானது நடைபெற்றது. இதனை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை இணைஅமைச்சர் கிஷன்ரெட்டி குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.
இவ்விழாவில் மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணைஅமைச்சர் எல்.முருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் வேலழகன், வினோத்கண்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்விழாவில் மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணைஅமைச்சர் எல்.முருகன் பேசுகையில், மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைந்தால் மாணவர்களின் சக்தியால் 2047-ல் இந்தியா வல்லரசு நாடாக மாறும் என பேசினார்.
இவ்விழாவில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி பேசுகையில்,
வேலூர் மாவட்டத்தில் இன்று கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். வேலூர் கோட்டையில் லிங்கத்தை 1981-ஆம் ஆண்டு கோவிலில் மீண்டும் பிரதிஷ்டை செய்தனர். நமது பாரம்பரியமான செங்கோலை புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நிறுவி தமிழ்நாட்டின் பெருமையை பறைசாற்றியுள்ளோம். மேலும் திருக்குறளையும் மொழிபெயர்த்து அதையும் குறிப்பாக ரஷ்ய மொழியில் மொழி பெயர்த்துள்ளனர். அதனை புதினிடம் வழங்கியதும் நமது சிறப்பு.
மேலும் இங்குதான் இந்தியாவிலேயே 1500 கிலோ தங்கத்தால் ஆன தங்க கோவிலும் உள்ளது. நமது பிரதமர் சொன்னதை போல் பழமையும் புதுமையும் இணைந்த இந்தியா முன்னேற்றம் என்பது இருக்கும். 13 லட்சம் கோடியாக இந்தியர்களின் வருமானம் உயர்ந்துள்ளது. அதில் தனி நபர்களின் வருமானமும் உயர்ந்துள்ளது.
மேலும் நெடுஞ்சாலைகள் கட்டமைப்பு, விமான நிலையங்கள் எண்ணிக்கையும் உயர்த்தியுள்ளோம். மேலும் வரலாற்று சிறப்பு மிக்க பல பணிகளை செய்துள்ளோம். அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியுள்ளோம்.
மேலும் முன்னேற்றத்திற்கு தமிழ்நாட்டையும் உதாரணமாக சொல்லலாம். தமிழ் சங்கமும், சௌராஷ்டிரா தமிழ் சங்கமும் தொன்மையை விளக்குகிறது. அதற்கு உதாரணம், தொல்காப்பியம் பல உள்நாட்டு மொழிகளிலும் சர்வதேச மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதற்காக பல கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 4.6 லட்சம் கோடி வரி வருகிறது. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கைத்தறி பூங்கா அமைக்க ரூ.19 கோடி ஒதுக்கியுள்ளோம்.
14 ஆண்டுகளில் தமிழகத்தில் மத்திய அரசு 2 ஆயிரம் கிலோமீட்டர் சாலைகளை அமைத்துள்ளோம். தமிழ்நாட்டிற்காக வந்தேபாரத் உள்ளிட்ட பல ரயில்களை வழங்கியுள்ளோம். தமிழகத்தின் 6 விமான நிலையங்களையும் வழங்கியுள்ளோம். தமிழகம் எலெக்ட்ரானிக் பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்கிறது. அதிலும் குறிப்பாக ஆப்பிள் செல்போன்களை அதிக அளவில் இங்குதான் தயாரிக்கின்றனர்.
மேலும் செமி கண்டக்டர் சிப் உற்பத்தியிலும், தமிழகம் முன்னிலையில் உள்ளது. 7 புதிய ஐஐடி-கள் 9 ஐ.ஐ.எம்-கள் வழங்கியுள்ளோம். மருத்துவ கல்லூரிகளையும் அதிகரித்துள்ளோம். அனைவரும் கட்டாயம் கல்வி பெற வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கம். மேலும் பிரதம மந்திரி மருத்துவ காப்பீடு திட்டத்தினையும் எல்லா குடும்பங்களுக்கும் வழங்கியுள்ளோம். இந்தியா 2047-ல் வல்லரசாக மாறும் என பேசினார்.
இவ்விழாவில் திரளான மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் பங்கேற்றனர்.


Comments
Post a Comment