• TAMCO கடன் மேளா முகாம்கள்.

  • தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) மூலம் சிறுபான்மையின மக்களுக்கு வழங்கப்படும் கடன் திட்டங்கள் - 2026-2027, சிறுபான்மையின மக்கள் அதிகம் வசிக்கும் இடங்கள், மசூதி, சர்ச், அரசு சமுதாய கூடம் மற்றும்  திருமண மண்டபங்களில் கடன் மேளா முகாம்கள்  நடைபெறவுள்ளது  - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர்.

சிறுபான்மையின மக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது.  இத்திட்டத்தின் கீழ் வியாபாரம் செய்யவும், தொழில் தொடங்கிடவும் அல்லது ஏற்கனவே செய்து வரும் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் தனிநபர் கடன், குழு கடன், விராசத் கடன் மற்றும் கல்வி கடன் வழங்கப்படுகிறது, அதன் விவரம் பின்வருமாறு :

 

வ.

எண்

திட்டம்

தகுதி

தேவைப்படும் சான்றுகள்

1.

தனிநபர் கடன்

1. விண்ணப்பதாரர் சிறுபான்மையின மதத்தினராக இருத்தல் வேண்டும்.

2. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

1.            4.   ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

2.        5. கைவினைஞர்களுக்கு குறைந்த வட்டி விகித்தில் மூலப்பொருட்கள், உபகரணங்கள், வாங்குவதற்கு விராசத்கடன் வழங்கப்படுகிறது.

1. சாதிச் சான்று,

2. வருமானச் சான்று,

3. பிறப்பிடச்சான்றிதழ்,  

4. குடும்ப அட்டை,

5. வங்கிக்கணக்கு புத்தகம்,

6.ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்கள்.

7. திட்ட தொழில் அறிக்கை,

 

 

 

 

 

 

2.

சுய உதவி குழுக்கடன் (சிறு கடன்)

3.

விராசத்கடன்

4.

கல்விக்கடன்

1. சிறுபான்மையின மாணவ மாணவிகள் அரசால்  அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி/ வேலை வாய்ப்பு/ பட்டப்படிப்பு பயில்பவர்களுக்கு கல்விக் கடனுதவி வழங்கப்படுகிறது.

1. உண்மைச் சான்றிதழ்,

2. கல்விக்கட்டணங்கள்

செலுத்திய ரசீது.

3.      3. மதிப்பெண் சான்றிதழ்

       மற்றும் வங்கி கோரும்                  இதரஆவணங்கள்

 

 

                  எனவே, இம்மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையின மக்கள், தனிநபர் கடன், குழுக்கடன், விராசத்கடன் மற்றும் மாணவ, மாணவியர்கள் கல்விக்கடன் விண்ணப்பங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுரைகளை பின்பற்றி, பத்திரிகை செய்தி பிரசுரம் செய்து, இத்திட்டத்தை அதிக அளவில் பயன்படுத்தி கொள்ளும் வகையில், வேலூர் மாவட்டத்தில், சிறுபான்மையின மக்கள் அதிகம் வசிக்கும் இடங்கள் மசூதி, சர்ச், அரசு சமுதாய கூடம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மற்றும் திருமண மண்டபங்களில் கடன் மேளா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,

சிறுபான்மையின மக்கள் அதிகம் வசிக்கும் இடங்கள் மசூதி, சர்ச், அரசு சமுதாயக்கூடம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் திருமணமண்டபங்கள் :

1.  தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஊசூர், நாள்: 06.10.2026 செவ்வாய் கிழமை, நேரம்: 10.00 மணி முதல் 04.00 மணி வரை.

2. S.E.A.R மஹால், 145, ஆலியார் தெரு, தரணம்பேட்டை, குடியாத்தம், வேலூர்-632601, கைபேசி-9715342786) நாள்: 13.10.2026 செவ்வாய் கிழமை,நேரம் 10.00 மணி முதல் 04.00 மணி வரை.

3.      22C, மாசிலாமணி நகர், (சிவில் சப்ளை குடோன் ரோடு), தொரப்பாடி, வேலூர், (மத்திய சிறை எதிரில்)(கைபேசி-8778136758). நாள்: 27.10.2026 செவ்வாய் கிழமை, நேரம் 10.00 மணி முதல் 04.00 மணி வரை.

4.  அரசு சமுதாயக்கூடம், பசுமாத்தூர் கிராமம், கேவி குப்பம் தாலுக்கா, வேலூர்,           நாள்: 03.11.2026 செவ்வாய் கிழமை,நேரம் 10.00 மணி முதல் 04.00 மணி வரை.

5. மகபூப் ஷாதிகானா (கல்யாண மண்டபம்) M C ரோடு கஸ்பா வேலூர், நாள்: 11.11.2026 புதன் கிழமை, நேரம்: 10.00 மணி முதல் 04.00 மணி வரை.

மேற்குறிப்பிட்ட இடங்களில் கடன் மேளா முகாம்கள் நடத்தப்படும். உரிய ஆவணங்களுடன் மேற்குறிப்பிட்ட முகாம்களில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.