Posts

• காந்தி ஜெயந்தி மதுபான கடைகள் மூடல்.

·         காந்தி ஜெயந்தி தினம் மதுபான கடை கள் மூடப்படும்                  தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் 02.10.2026 (வெள்ளிக் கிழமை) காந்தி ஜெயந்தி தினம் அன்றைய தினத்தில் மதுபான கடைகளை மூடி வைக்க வேண்டும் என சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட தினத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் , கடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுபான கூடங்கள் (FL1/ FL2/ FL3) அனைத்தும் மூடப்படும் எனவும், அன்றைய தினங்களில் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி தினங்களில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால், சம்மந்தப்பட்ட டாஸ்மாக் மத...

• வேலூர் மாவட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு.

வேலூர் மாவட்ட விவசாயிகள் சிறப்பு பருவ நெல் பயிரை பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் - மாவட்ட ஆட்சி தலைவர் .        வேலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் நடப்பாண்டு சிறப்பு பருவ நெல் பயிருக்கு தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது . இந்த திட்டத்தின்கீழ் கடன் பெறும் விவசாயிகள் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் விருப்பத்தின்பேரில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம் . கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ அல்லது பொதுசேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம் .         விவசாயிகள் இந்த திட்டத்தில் பதிவு செய்யும்போது பதிவு விண்ணப்பம் , கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல் , விதைப்பு சான்றிதழ் , வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல...

• சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தில் ரூ.1.06 கோடி பணிகள்.

Image
·          சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தில் ரூ . 1.06 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசு நிதியில் புதிய பயிற்சி மைதானம், தங்கும் விடுதி, கூட்டரங்கு புதுப்பித்தல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தல்  பணிகள் -  கர்நாடக டிஜிபி அலோக்குமார் அடிக்கல் நாட்டினார்.            வேலூர் மாவட்டம் , தொரப்பாடியில் உள்ள சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தில் ரூ. 1.06 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பூமி பூஜை நடைபெற்றது.         சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தின் இயக்குநர் பிரதீப் தலைமையில் மத்திய உள்துறையின் சார்பில் ரூ 1.06 கோடி மதிப்பீட்டில் புதிய பயிற்சி மைதானம், ஆடிட்டோரியம் , கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் தங்கும் விடுதிகள் கட்டுதல் என ரூ 1.06 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு கர்நாடக சிறை துறை டிஜிபி அலோக்குமார் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பூமி பூஜையும் நடைபெற்றது.     இவ்விழாவில் அ...

• வேலூர் “உயர்வுக்கு படி” கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி.

வேலூர் மாவட்டத்தில் உயர்கல்வியில் சேராத மாணவ , மாணவிகளுக்கான “ உயர்வுக்கு படி ” எனும் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சி தலைவர் . வேலூர் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாவட்ட திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து   மாவட்ட ஆட்சியர் - ன் வழிகாட்டுதலின்படி, அரசு மேல்நிலை பள்ளிகளில் பயின்று தேர்ச்சி அடைந்த, தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மொத்தம் 8,901 மாணவர்களில் இதுவரை 8,416 பேர் கலை & அறிவியல் / மருத்துவம் துணைபடிப்புகள் / பொறியியல் / ITI / பாலிடெக்னிக் மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்.    தற்போது உயர்கல்வியில் சேராத 485 மாணவர்களுக்கு வழிகாட்டுதல், தொழில் வழிகாட்டுதல், உதவி தொகை திட்டங்கள், கல்விக்கடன் மற்றும் நேரடி சேர்க்கை சார்ந்து மண்டல அளவில் 2 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.        அதன்படி, காட்பாடி மாவட்ட திட்ட அலுவலகத்தில் 29.09.2026 செவ்வாய்கிழமை அன்று நடைபெற உள்ள முகாமில் அணைக்கட்டு, கணியம்பாடி, காட்பாடி, வேலூர் நகர் மற்றும் புறநகர் ஆகிய 5...