• சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தில் ரூ.1.06 கோடி பணிகள்.

·         சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தில் ரூ.1.06 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசு நிதியில் புதிய பயிற்சி மைதானம், தங்கும் விடுதி, கூட்டரங்கு புதுப்பித்தல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தல் பணிகள் - கர்நாடக டிஜிபி அலோக்குமார் அடிக்கல் நாட்டினார்.

          வேலூர் மாவட்டம், தொரப்பாடியில் உள்ள சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தில் ரூ.1.06 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பூமி பூஜை நடைபெற்றது.

     சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தின் இயக்குநர் பிரதீப் தலைமையில் மத்திய உள்துறையின் சார்பில் ரூ1.06 கோடி மதிப்பீட்டில் புதிய பயிற்சி மைதானம், ஆடிட்டோரியம், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் தங்கும் விடுதிகள் கட்டுதல் என ரூ1.06 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு கர்நாடக சிறை துறை டிஜிபி அலோக்குமார் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பூமி பூஜையும் நடைபெற்றது.

    இவ்விழாவில் அதிகாரிகள் ப்யூலா, கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.