• வேலூர் மாவட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு.
- வேலூர் மாவட்ட விவசாயிகள் சிறப்பு பருவ நெல் பயிரை பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் - மாவட்ட ஆட்சி தலைவர்.
வேலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் நடப்பாண்டு சிறப்பு பருவ நெல் பயிருக்கு தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் கடன் பெறும் விவசாயிகள் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் விருப்பத்தின்பேரில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ அல்லது பொதுசேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.
விவசாயிகள் இந்த திட்டத்தில் பதிவு செய்யும்போது பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், விதைப்பு சான்றிதழ், வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டண தொகையை செலுத்திய பின்னர் அதற்கான ரசீதை வங்கிகளில் பெற்று கொள்ளலாம்.
சிறப்பு பருவ நெல் பயிருக்கு 16.11.2026 -ந் தேதி காப்பீடு செய்வதற்கு கடைசி நாளாகும். எனவே விவசாயிகள் தங்கள் அருகே உள்ள பொதுசேவை மையத்தை அணுகி காப்பீடு பிரீமியம் கட்டணமாக ஏக்கருக்கு நெற்பயிருக்கு ரூ.573, செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு அருகேயுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் / வேளாண்மை அலுவலர் அல்லது உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகலாம் என மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment