• வேலூர் “உயர்வுக்கு படி” கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி.
- வேலூர் மாவட்டத்தில் உயர்கல்வியில் சேராத மாணவ, மாணவிகளுக்கான “உயர்வுக்கு படி” எனும் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சி தலைவர்.
வேலூர் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாவட்ட திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து மாவட்ட ஆட்சியர்-ன் வழிகாட்டுதலின்படி, அரசு மேல்நிலை பள்ளிகளில் பயின்று தேர்ச்சி அடைந்த, தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மொத்தம் 8,901 மாணவர்களில் இதுவரை 8,416 பேர் கலை & அறிவியல் / மருத்துவம் துணைபடிப்புகள் / பொறியியல் / ITI / பாலிடெக்னிக் மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். தற்போது உயர்கல்வியில் சேராத 485 மாணவர்களுக்கு வழிகாட்டுதல், தொழில் வழிகாட்டுதல், உதவி தொகை திட்டங்கள், கல்விக்கடன் மற்றும் நேரடி சேர்க்கை சார்ந்து மண்டல அளவில் 2 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, காட்பாடி மாவட்ட திட்ட அலுவலகத்தில் 29.09.2026 செவ்வாய்கிழமை அன்று நடைபெற உள்ள முகாமில் அணைக்கட்டு, கணியம்பாடி, காட்பாடி, வேலூர் நகர் மற்றும் புறநகர் ஆகிய 5 ஒன்றியங்களை சார்ந்த மாணவர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் முகாம் குடியாத்தம் நகராட்சி மேல்நிலை பள்ளியில் 30.09.2026 புதன்கிழமை அன்று நடைபெற உள்ள முகாமில் குடியாத்தம், கீ.வ.குப்பம் மற்றும் பேர்ணாம்பட்டு ஆகிய 3 ஒன்றியங்களை சார்ந்த மாணவர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2024-2025-ம் கல்வி ஆண்டில் உயர்கல்வி சேராத சுமார் 630 மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற சார்ந்த தலைமையாசிரியர் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு முகாமிலேயே விண்ணப்பித்து நேரடி சேர்க்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு 9788859190 என்ற மாவட்ட கட்டுபாட்டு அறை எண்ணை தொடர்பு கொள்ளவும். எனவே, மாணவர்கள் “உயர்வுக்கு படி” எனும் உயர்கல்வி வழிகாட்டி முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment