Posts

• வேலூர் கோட்டையில் தவெக-வினர் தங்கத்தேர் வழிபாடு.

Image
·          வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் அமைச்சர் விஜய் பாலாஜி தலைமையில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு ·          தாராபுரம் மதுராந்தகம் இடைதேர்தல் தவெக-வினர் வெற்றி              வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில்   தாராபுரம் , மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி பெற்றதை அடுத்து மாணவரணி பொறுப்பாளர் ரமேஷ் தலைமையில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் விஜய்பாலாஜி கலந்து கொண்டு தங்க தேரை வடம் பிடித்து இழுத்தார்.     இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் வினோத் கண்ணா , சுதாகர் , மற்றும் நிர்வாகி தாஸ் உள்ளிட்ட திரளான தவெக பங்கேற்று தங்கத்தேரை இழுத்து வழிபாடு செய்தனர். பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.  

• வேலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்

Image
வேலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் - வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது .                   வேலூர் மாவட்டத்தில் அக்டோபர் 2026-ம் மாத விவசாயிகள் குறை தீர்வு   நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து.சுரேஷ், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் உரிய துறை அலுவலர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலாவதாக, கால்நடை மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பாகவும் திட்ட விளக்க உரை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டியும், வெற்றிப் பயணத் திட்டத்தில் ஆண்களுக்கு / பெண்களுக்கு என தனித்தனியாக இடஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியும் கோரிக்கை வைத்தனர்.                   பொன்னை, கொல்லப்பல்லி, சுல்தான் ஏரி மதகை சீர்செய்யவும், கருவேல மரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்கவும், காட்பாடி உழவ...

• தேசிய அஞ்சல் துறை வார விழா - விழிப்புணர்வு ஊர்வலம்.

Image
 ·          தேசிய அஞ்சல் துறை வார விழா - விழிப்புணர்வு ஊர்வலம் .            வேலூர் மாவட்டம் , வேலூரில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் தேசிய அஞ்சல் துறை வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.       இணை அஞ்சல் கண்காணிப்பாளர் பார்வதி தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலமானது , உதவி அஞ்சல் அலுவலர் காசிநாதன் , மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட திரளான அஞ்சல் துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.       இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மக்கள் விரைவாக அஞ்சல்களை அனுப்பவும் , மெயில்கள் மூலம் கடிதங்களை அனுப்பவும் , சேமிப்பு கணக்கு வைக்கவும் , வைப்பு தொகைகள் சேமிக்கவும், அஞ்சல் துறையின் மக்கள் பங்களிப்பை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று ஊர்வலம் மீண்டும் தலைமை தபால் நிலையத்தில் நிறைவடைந்தது.  

• இடைநிற்றல் மாணவர்களை பள்ளி, கல்லூரிகளில் சேர்க்க வேண்டும்

Image
 ·          இடைநிற்றல் மாணவர்களை பள்ளி , கல்லூரிகளில் சேர்க்க உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் , எம்எல்ஏ - க்கள் உதவ வேண்டும் - விஐடி வேந்தர் கோ . விசுவநாதன் வலியுறுத்தல்.             வேலூர் : படிக்காமல் இடை நிற்பவர்களை பார்த்து பள்ளி , கல்லூரிகளில் கொண்டு போய் சேர்க்க ஊராட்சி , நகராட்சி , மாநகராட்சி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஐடி வேந்தர் கோ . விசுவநாதன் பேசினார் .     விஐடி பல்கலைகழகத்தில் அனைவர்க்கும் உயர்கல்வி அறக்கட்டளை சார்பில் உதவிதொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் 925 மாணவ , மாணவிகளுக்கு ரூ .87.15 லட்சம் உதவிதொகை வழங்கப்பட்டது .       விழாவுக்கு தலைமை வகித்து , அனைவர்க்கும் உயர்கல்வி அறக்கட்டளை   தலைவரும் , விஐடி வேந்தருமான கோ . விசுவநாதன் பேசியது :     தமிழகத்தில் வட ஆற்காடு , தென் ஆற்காடு மற்றும் தருமபுரி மாவட்டங்கள்தான் கல்வி , பொருளாதாரத்தில் ப...