• வேலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்
- வேலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் - வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் அக்டோபர் 2026-ம் மாத விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து.சுரேஷ், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் உரிய துறை அலுவலர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதலாவதாக, கால்நடை மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பாகவும் திட்ட விளக்க உரை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டியும், வெற்றிப் பயணத் திட்டத்தில் ஆண்களுக்கு / பெண்களுக்கு என தனித்தனியாக இடஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியும் கோரிக்கை வைத்தனர்.
பொன்னை, கொல்லப்பல்லி, சுல்தான் ஏரி மதகை சீர்செய்யவும், கருவேல மரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்கவும், காட்பாடி உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு போதிய இடவசதி அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கவும், மாநகராட்சி பகுதியில் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுவதும் எரியூட்டுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்கவும், சோலார் சூரிய ஒளி மின்சாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கோரிக்கை வைத்தனர்.
வேலூர் மாவட்டத்தில் மா தொழிற்சாலை அமைக்கவும், ஊசூர் மற்றும் பேர்ணாம்பட்டு பகுதியில் பகல் நேரத்தில் தெருவிளக்கு எரிவதை தடுக்கவும், நூறு நாள் திட்டத்தின் மூலம் அனைத்து அலுவலகங்களையும் மற்றும் மின்கம்பங்களை சுற்றியுள்ள முள்புதர்களையும் சுத்தம் செய்ய பணியாளர்களை அனுப்பவும், பேர்ணாம்பட்டில் 14ஜி நெம்பர் பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்தனர்.
புத்தூர், புலிமேடு, வல்லண்டராமம் ஏரி கால்வாயை அகற்ற நடவடிக்கை எடுக்கவும், பள்ளிகொண்டா முதல் செதுவாலை வரை உள்ள மதகை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கவும், ஆவின் மூலம் பால் கொள்முதல் விலையை ஏற்றித்தர நடவடிக்கை எடுக்கவும், சின்னதோட்டாளம் முதல் பாலாறு வரை சாலை அமைத்து தரவும் கோரிக்கை வைத்தனர்.
இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment