• TWEES கீழ் சிறப்பு நேர்காணல்.
வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (TWEES) கீழ் விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு நேர்காணல் ( TFC) மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் 22.10.2026 அன்று நடைபெறவுள்ளது என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தகவல். பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற்று தொழில் முனைவோராக உருவாகி , தங்களுக்கும் பிறருக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் குறு , சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறையின் சார்பில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் (TWEES) செயல்படுத்தப்பட்டு வருகிறது . இத்திட்டத்தில் கீழ் பெண்கள் மற்றும் திருநங்கைகள் ரூ .10 இலட்சம் வரை திட்டச் செலவு கொண்ட புதிய உற்பத்தி , சேவை மற்றும் வணிக தொழில்களை தொடங்க வங்கி கடன் உதவி பெறலாம் . மேலும் , திட்ட செலவில் 25 சதவீத மானியம் ( அதிகபட்சம் ரூ .2 இலட்சம் வரை ) வழங்கப்படுகிறது . ...