• வேலூர் வாசகர் வட்டம் கோவில் கவியரங்கம்.

·         வேலூர் வாசகர் வட்டம் சார்பில் கருமாரியம்மன் கோவிலில் கவியரங்கம் - முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

     வேலூர் மாவட்டம், வேலூர் வாசகர் வட்டம் சார்பில் டிட்டர்லைன் பகுதியில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவில் வளாகத்தில் 'கோவில் கவியரங்கம்' நடைபெற்றது.

     நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட தலைவர் ஜெ.ரவி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தேவியரை போற்றுவோம் என்ற தலைப்பில் நடந்த கவியரங்கத்தை முன்னாள் எம்.எல்.ஏ., ப.கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

     கவியரங்கத்திற்கு செயலாளர் கவிஞர் ச.லக்குமிபதி  தலைமை தாங்கி கவிதை வாசித்தார்.

   நிகழ்ச்சியில் கவிஞர்கள் குமரன் சீனிவாசன், பொன்.ராஜன்பாபு, எஸ்.கே.எம்.மோகன், ஜோசப் அன்னையா,  ஞான.சக்திவேலன், தாமோதரன், ஹரிகிருஷ்ணன், சிவராமன், சேகர் ஆகியோர் கவிதை வாசித்தனர்.

     நிகழ்ச்சியில் தண்டபாணி மஹால் உரிமையாளர் த.ராஜா, மதன் சிவம், ஆறுமுகம், காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.