• மஹா விஷ்ணு துர்க்கை அம்மன் நவராத்திரி.

·         மஹா விஷ்ணு துர்க்கை அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா. ·         தொழிலதிபர் செல்வம் யாதவ் பங்கேற்பு

    வேலூரில் ஸ்ரீ மஹா விஷ்ணு துர்க்கை அம்மன், ஸ்ரீ சபரிநாதன் ஐயப்பன், ஸ்ரீதேவி பூதேவி  சீனிவாச பெருமாள் கோவிலில் 37-ம் ஆண்டு நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது.

     கடந்த 11-ம் தேதி ஸ்ரீ மஹா துர்க்கை அம்மன் அலங்காரத்துடன் நவராத்திரி திருவிழா தொடங்கியது. அதை தொடர்ந்து கஜலட்சுமி அலங்காரம், சிவலிங்க பூஜை அலங்காரம், அன்னபூரணி அலங்காரம், வாராகி அலங்காரம், திருவேற்காடு கருமாரியம்மன் அலங்காரம் ஆகியவை நடந்தது. மாலை தொழிலதிபர் கே.செல்வம் யாதவ் ஏற்பாட்டில் அவருடைய தலைமையில் ஸ்ரீ லட்சுமி நாராயணன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக ஆன்மீக சொற்பொழிவாளர் முனைவர் கவிஞர் ச.லக்குமிபதி கலந்து கொண்டு 'நலம் தரும் நவராத்திரி' என்ற தலைப்பில் பல்வேறு இலக்கிய சான்றுகளை விளக்கி மேற்கோள் காட்டி சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.

     இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அதை தொடர்ந்து மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், பிரம்மா சரஸ்வதி அலங்காரமும்,  துர்க்கை அம்மன் அலங்காரமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.

 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.