Posts

• TWEES கீழ் சிறப்பு நேர்காணல்.

வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (TWEES) கீழ் விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு நேர்காணல் ( TFC)    மாவட்ட தொழில் மைய   அலுவலகத்தில் 22.10.2026 அன்று   நடைபெறவுள்ளது என   வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தகவல்.                 பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற்று தொழில் முனைவோராக உருவாகி , தங்களுக்கும் பிறருக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் குறு , சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறையின் சார்பில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் (TWEES) செயல்படுத்தப்பட்டு வருகிறது . இத்திட்டத்தில் கீழ் பெண்கள் மற்றும் திருநங்கைகள் ரூ .10 இலட்சம் வரை திட்டச் செலவு கொண்ட புதிய உற்பத்தி , சேவை மற்றும் வணிக தொழில்களை தொடங்க வங்கி கடன் உதவி பெறலாம் . மேலும் , திட்ட செலவில் 25 சதவீத மானியம் ( அதிகபட்சம் ரூ .2 இலட்சம் வரை ) வழங்கப்படுகிறது . ...

• Free Training Smartphone Servicing and Repair.

Image
MSME DFO Chennai to Conduct Free 30-Day Training Programme on Smartphone Servicing and Repair at VIT Vellore.              Vellore, Tamil Nadu: The Ministry of Micro, Small and Medium Enterprises (MSME), Government of India, through the MSME Development & Facilitation Office (DFO), Chennai, in association with Vellore Institute of Technology (VIT), Business School, Vellore, and Noon Computers, is organising a 30-day Entrepreneurship-cum-Skill Development Programme (ESDP) on Smartphone Servicing and Repair, commencing on 3 November 2026 at the VIT Vellore campus. The programme aims to equip participants with practical skills in mobile hardware, soldering and PCB basics, software flashing, diagnostics, troubleshooting, servicing and repair. It will also provide orientation on entrepreneurship, setting up a mobile repair business, government schemes and financial support. The training is offered free of course fees....

• அணைக்கட்டு வளர்ச்சி திட்ட பணிகள் ஆட்சியர் ஆய்வு.

Image
அணைக்கட்டு வட்ட த்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.                  வேலூர் மாவட்ட ம், அணைக்கட்டு வட்ட த்தில் உயர்மட்ட மேம்பால பணி, டெங்கு தடுப்பு நடவடிக்கை, தொடக்க பள்ளி, ஊராட்சி மன்ற அலுவலகம்   ஆகிய இடங்களில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார். வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் அணைக்கட்டு வட்டம், ஒடுகத்தூர் பேரூராட்சி, ஒடுகத்தூர்-நேமந்தபுரம் சாலையில் ரூ.8.25 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால கட்டுமான பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைவாக முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, அணைக்கட்டு வட்டம், கல்லுட்டை பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் இல்லந்தோறும் சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து, வீடு வீடாக சென்று காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்களை கண்டறியும் பணிகள் , கொசு உற்பத்தி ஆதாரங்களை கண்டறிந்து அழிக்கும் பணிகள் , லார்வா ஒ...

• வேலூர் வாசகர் வட்டம் கோவில் கவியரங்கம்.

Image
·          வேலூர் வாசகர் வட்டம் சார்பில் கருமாரியம்மன் கோவிலில் கவியரங்கம் - முன்னாள் எம் . எல் . ஏ . கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.       வேலூர் மாவட்டம் , வேலூர் வாசகர் வட்டம் சார்பில் டிட்டர்லைன் பகுதியில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவில் வளாகத்தில் ' கோவில் கவியரங்கம் ' நடைபெற்றது .       நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட தலைவர் ஜெ . ரவி தலைமை தாங்கினார் . நிகழ்ச்சியில் தேவியரை போற்றுவோம் என்ற தலைப்பில் நடந்த கவியரங்கத்தை முன்னாள் எம் . எல் . ஏ ., ப . கார்த்திகேயன் தொடங்கி வைத்தார் .       கவியரங்கத்திற்கு செயலாளர் கவிஞர் ச . லக்குமிபதி   தலைமை தாங்கி கவிதை வாசித்தார் .     நிகழ்ச்சியில் கவிஞர்கள் குமரன் சீனிவாசன் , பொன் . ராஜன்பாபு , எஸ் . கே . எம் . மோகன் , ஜோசப் அன்னையா ,   ஞான . சக்திவேலன் , தாமோதரன் , ஹரிகிருஷ்ணன் , சிவராமன் , சேகர் ஆகியோர் கவிதை வாசித்தனர் .       நிகழ்ச்சியில் தண்டபாணி மஹ...

• மகத்தான சேவையில் நறுவீ மருத்துவமனை.

Image

• மஹா விஷ்ணு துர்க்கை அம்மன் நவராத்திரி.

Image
·          மஹா விஷ்ணு துர்க்கை அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா.  ·          தொழிலதிபர் செல்வம் யாதவ் பங்கேற்பு      வேலூரில் ஸ்ரீ மஹா விஷ்ணு துர்க்கை அம்மன் , ஸ்ரீ சபரிநாதன் ஐயப்பன் , ஸ்ரீதேவி பூதேவி   சீனிவாச பெருமாள் கோவிலில் 37- ம் ஆண்டு நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது .       கடந்த 11- ம் தேதி ஸ்ரீ மஹா துர்க்கை அம்மன் அலங்காரத்துடன் நவராத்திரி திருவிழா தொடங்கியது. அதை தொடர்ந்து கஜலட்சுமி அலங்காரம் , சிவலிங்க பூஜை அலங்காரம் , அன்னபூரணி அலங்காரம் , வாராகி அலங்காரம் , திருவேற்காடு கருமாரியம்மன் அலங்காரம் ஆகியவை நடந்தது . மாலை தொழிலதிபர் கே . செல்வம் யாதவ் ஏற்பாட்டில் அவருடைய தலைமையில் ஸ்ரீ லட்சுமி நாராயணன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது .     இதில் சிறப்பு அழைப்பாளராக ஆன்மீக சொற்பொழிவாளர் முனைவர் கவிஞர் ச . லக்குமிபதி கலந்து கொண்டு ' நலம் தரும் நவராத்திரி ' என்ற ...

• கீ.வ.குப்பம் வட்டத்தில் ”உங்களை தேடி, உங்கள் ஊரில் ” திட்டம்

·          ” உங்களை தேடி , உங்கள்   ஊரில் ” திட்டம் வேலூர் மாவட்ட ம், கீ.வ.குப்பம் வட்டத்தில் 22.10.2026   வியாழக் கிழமை மற்றும் 23.10.2026 வெள்ளி க்கிழமை ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.                   மக்களை நாடி , மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் ” உங்களை தேடி , உங்கள் ஊரில் ” என்ற திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது .         ” உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் ” (UTUO) படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் ஒவ்வொரு மாதமும் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து , மக்களின் குறைகளை கேட்டறிந்து , அரசின் அனைத்து நலத்திட்டங்களும் , சேவைகளும் , தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டுமென்று மாண்புமிகு தமி ழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தப்பட்டுள்ளது ...