Posts

• வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம்.            இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, சிறப்பு சுருக்கத் திருத்தம் (SSR) – தகுதி நாளாக 01.01.2027 மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திருத்தத்தின் மூலம் தகுதியுள்ள புதிய வாக்காளர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத தகுதியுள்ள நபர்கள் தங்களது பெயர்களைச் சேர்த்துக் கொள்ளவும், ஏற்கனவே பட்டியலில் உள்ளவர்கள் தங்களது விவரங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.       வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஏதேனும் குறைகள் இருந்தாலோ அல்லது உதவி தேவைப்பட்டாலோ அலுவலக நேரத்தில் 1950 என்ற உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என்பதை https://voters.eci.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.                           தற்போது சிறப்பு சுருக்கத் திருத்தத்தை மேற்கொள்வதற்காக இந்தியத் தேர்தல் ஆணையத்தால்...

• வெடி விபத்தில் பாதித்த குடும்பத்தினருக்கு நிதி.

Image
·          வெடி விபத்தில் உயிரிழந்த, காயம் அடைந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி.     வேலூர் மாவட்டம் , அணைக்கட்டு கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர் மற்றும் காயம் அடைந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதி உதவியை தமிழ்நாடு முதலமைச்சர் ச . ஜோசப்விஜய் அறிவித்துள்ளார் .         இதனை தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடி விபத்தில் உயிரிழந்த காயத்ரி என்பவரது குடும்பத்தினரிடம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 4 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார் . நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு . து . சுரேஷ் உடன் இருந்தார் .     இதேபோன்று விபத்தில் காயமுற்று வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சங்கீதா குடும்பத்தினரிடம் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி . எஸ் . லீலாஅலெக்ஸ் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ . 1 ...

• விஐடி பல்கலை.-ல் பி.டெக். மாணவர் சேர்க்கை தொடக்கம்.

Image
 ·          விஐடி பல்கலை .- ல் பி . டெக் . மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்.       வேலூர் மாவட்டம், வேலூர், விஐடி பல்கலைகழகத்தில் 2027- ஆம் கல்வி ஆண்டுக்கான பி . டெக் . பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நுழைவுத் தோ்வுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு   தொடங்கியது .       இதுகுறித்து , விஐடி வேந்தர் கோ . விசுவநாதன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :       விஐடி பல்கலைகழகத்தின் வேலூா் , சென்னை , அமராவதி , போபால் வளாகங்களில் பி . டெக் . பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நுழைவுத் தோ்வுக்கான (VITEEE) ஆன்லைன் விண்ணப்பப் பதிவு செவ்வாய்க்கிழமை ( அக்டோபர் 20) தொடங்கியது .       மேலும் https://viteee.vit.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் .   ஆன்லைன் விண்ணப்பப் பதிவு முடிந்த பின்னா் நுழைவுத் தோ்வு ஒரே கட்டமாக 2027 ஏப்ரல் ...

• வேலூரில் ப.தண்டபாணி முதலியார் நினைவு நாள்.

Image
 ·          வேலூரில் ப . தண்டபாணி முதலியார் நினைவு நாள் - பொதுமக்களுக்கு   அன்னதானம்.     வேலூர் மாவட்டம் , வேலூர், தண்டபாணி முதலியார் மஹால் உரிமையாளர் ப . தண்டபாணி முதலியாரின் 36 -ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .       முன்னாள் எம் . எல் . ஏ .- க்கள் ப . நீலகண்டன் , ப . கார்த்திகேயன் ஆகியோர்   அன்னதானத்தை தொடங்கி வைத்தனர் .     நிகழ்ச்சிக்கு த . தேன்மொழி , த . ராஜா , ரா . கார்த்திகா , கா . யுவராஜ் , நிவேதாவிமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .       நிகழ்ச்சியில் தி . மு . க மாவட்ட அவைதலைவர் முகமதுசகி , தொழிலதிபர்கள் குருவாயூரப்பன் சம்பத் , லட்சி என்ற லட்சுமணன் , கயிலை எஸ் . தனசேகர் , ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் ஆடிட்டர் பாண்டியன் , முன்னாள் கவுன்சிலர்கள் நாகு என்ற நாகராஜ் , எஸ் . ராஜா , அ . தி . மு . க ., இலக்கிய அணி மாவட்ட செயலாளர் எம் . ஏ . ராஜா மற்றும் மாந...