• விஐடி பல்கலை.-ல் பி.டெக். மாணவர் சேர்க்கை தொடக்கம்.


 ·         விஐடி பல்கலை.-ல் பி.டெக். மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்.

     வேலூர் மாவட்டம், வேலூர், விஐடி பல்கலைகழகத்தில் 2027-ஆம் கல்வி ஆண்டுக்கான பி.டெக். பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நுழைவுத் தோ்வுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு  தொடங்கியது.

     இதுகுறித்து, விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

     விஐடி பல்கலைகழகத்தின் வேலூா், சென்னை, அமராவதி, போபால் வளாகங்களில் பி.டெக். பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நுழைவுத் தோ்வுக்கான (VITEEE) ஆன்லைன் விண்ணப்பப் பதிவு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) தொடங்கியது.

     மேலும் https://viteee.vit.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  ஆன்லைன் விண்ணப்பப் பதிவு முடிந்த பின்னா் நுழைவுத் தோ்வு ஒரே கட்டமாக 2027 ஏப்ரல் 28-ஆம் தேதி தொடங்கி மே 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்தியாவில் மொத்தம் 133 நகரங்களிலும், வெளிநாடுகளில் 9 தோ்வு மையங்களிலும் நுழைவு தோ்வு நடைபெறும்.

     இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.