• வெடி விபத்தில் பாதித்த குடும்பத்தினருக்கு நிதி.

·         வெடி விபத்தில் உயிரிழந்த, காயம் அடைந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி.

   வேலூர் மாவட்டம், அணைக்கட்டு கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர் மற்றும் காயம் அடைந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதி உதவியை தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப்விஜய் அறிவித்துள்ளார்.

       இதனை தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடி விபத்தில் உயிரிழந்த காயத்ரி என்பவரது குடும்பத்தினரிடம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து. சுரேஷ் உடன் இருந்தார்.

   இதேபோன்று விபத்தில் காயமுற்று வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சங்கீதா குடும்பத்தினரிடம் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 1 லட்சத்துக்கான காசோலையினை வழங்கினார்.

     இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து.சுரேஷ், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.விஜய் சந்திரன், அரசு வேலூர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் மரு.முத்து சித்ரா உட்பட பலர் உடன் இருந்தனர்.

 

 

 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.