• வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம்.

  • வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம்.

          இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, சிறப்பு சுருக்கத் திருத்தம் (SSR) – தகுதி நாளாக 01.01.2027 மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திருத்தத்தின் மூலம் தகுதியுள்ள புதிய வாக்காளர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத தகுதியுள்ள நபர்கள் தங்களது பெயர்களைச் சேர்த்துக் கொள்ளவும், ஏற்கனவே பட்டியலில் உள்ளவர்கள் தங்களது விவரங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.

      வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஏதேனும் குறைகள் இருந்தாலோ அல்லது உதவி தேவைப்பட்டாலோ அலுவலக நேரத்தில் 1950 என்ற உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என்பதை https://voters.eci.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

                          தற்போது சிறப்பு சுருக்கத் திருத்தத்தை மேற்கொள்வதற்காக இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணை பின்வருமாறு:

 

வ.எண்

செயல்பாடு

கால அட்டவணை

1.

வாக்குச்சாவடிகளைச் சீரமைத்தல் / மறுசீரமைத்தல்

02.11.2026-க்குள்

2.

ஒருங்கிணைக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுதல்

12.11.2026

3.

கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் அளிக்கும் காலம்

12.11.2026 முதல் 11.12.2026 வரை

4.

கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் மீது தீர்வு காணுதல்

28.12.2026-க்குள்

5.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுதல்

04.01.2027

                        இச்சிறப்பு சுருக்கத் திருத்தக் காலத்தில் 1200 மேல் வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்தல், பெயர் மாற்றம் மற்றும் கட்டடம் மாற்றம் தொடர்பாக மாற்றம் செய்யவேண்டி இருப்பது தொடர்பாக மாவட்ட  தேர்தல் அலுவலர் மற்றம் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் அனைத்து அங்கீரக்கப்பட்ட அரசியல் கட்சி பிரிதிநிதிகளுடனான ஆலேசானை கூட்டம் 21.10.2026 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றங்கள் குறித்து  விண்ணப்பங்கள் மற்றும் ஆட்சேபனைகள் வரும் 26.10.2026-க்குள் கீழ்கண்டவாறு சட்டமன்ற வாரியாக தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

 

தொகுதி

வாக்காளர் பதிவு அலுவலர்

கைபேசி எண்

40.காட்பாடி

திரு.சி.மாறன்

தனித்துணை ஆட்சியர்

(சமூக பாதுகாப்பு திட்டம்)

8838002055

43.வேலூர்

திருமதி.கேத்தரின் சரண்யா.இ.ஆ.ப

மாநகராட்சி ஆணையர்

7397389320

44.அணைக்கட்டு

திரு.ஆர்.எஸ்.ராம்குமார்

வருவாய் கோட்டாட்சியர், வேலூர்.

9445000417

45.கீழ்வைத்தியணான்குப்பம்

திரு.எஸ்.சரவணன்

மாவட்ட வழங்கல் மற்றும்

நுகர்வோர்  பாதுகாப்பு அலுவலர்.

9445000184

46.குடியாத்தம்

திரு.கே.செந்தில்குமார்

வருவாய் கோட்டாட்சியர், குடியாத்தம்.

9442999120

இச்சிறப்பு சுருக்கத் திருத்தக் காலத்தில் வாக்காளர் பட்டியலில் வாக்காளராக சேர தகுதியுள்ள நபர்கள்,  தங்களது பெயர்களை படிவம்-6 வழங்கி  சேர்த்து கொள்ளவும்,  வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே உள்ள பெயரை நீக்கவும், பட்டியலில் பெயரை சேர்ப்பதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவும் படிவம் -7 ஐ சமர்ப்பிக்கவும், குடியிருப்பு முகவரி மாற்றவும், பதிவுகளை திருத்தம் செய்யவும் , வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் மற்றும் மாற்றுத்திறனாளிகளை குறிப்பது தொடர்பாக படிவம்-8 சமர்ப்பிக்கலாம் என வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்  மாவட்ட ஆட்சி தலைவர்
பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.