• வேலூரில் ஒய்.எம்.சி.ஏ. (YMCA), சார்பில் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் – 2023

 ·         வேலூரில் ஒய்.எம்.சி.ஏ. (YMCA), சார்பில் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் – 2023 (Christmas Carol's - 2023) மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி.

·         வலிமையற்ற மக்களுக்கு உதவுவதுதான் கிறிஸ்மஸ் - வேலூர் CSI பேராயர் டாக்டர் ஹென்றிசர்மாநித்தியானந்தம் கிறிஸ்துமஸ் வாழ்த்துரை.

     வேலூர் ஊரிசு கல்லூரி டிபோர் வளாகத்தில் அமைந்துள்ள முனைவர் ஜெயகரன் ஐசக் உள்விளையாட்டு அரங்கில் ஒய்.எம்.சி.ஏ. (YMCA), சார்பில் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் – 2023 (Christmas Carol's - 2023) மாபெரும் இன்னிசை விருந்தின் நிகழ்வு வெகுசிறப்பாக நடைபெற்றது.

     இந்த நிகழ்வில் வேலூர் CSI பேராயத்தின் பேராயர் டாக்டர் ஹென்றிசர்மாநித்தியானந்தம் கலந்து கொண்டு சிறப்புரையும் தொடக்க உரையும் கிறிஸ்துமஸ் அருளுரையும் வாழ்த்துரையும் வழங்கி முதல் பாடல் பாடி இந்த இன்னிசை நிகழ்வை இனிதே தொடங்கினார்.

     இந்த இன்னிசை நிகழ்ச்சியில் 25-க்கும் மேற்பட்ட திருச்சபைகளின் பாடகர் குழுவினர்கள், பல்வேறு திருச்சபைகளை சார்ந்தவர்கள், நிறுவனங்களை சார்ந்தவர்கள் வேலூரை சுற்றியுள்ள அனைத்து திருச்சபைகளிலும் இருந்து மக்கள் திரளாய் பங்கெடுத்தனர். பாடல் குழுவினர் சிறப்பாக பங்கேற்று இந்த கிறிஸ்மஸ் கேரல்சை வெற்றிகரமாக நடத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றனர். குழந்தைகள் இசையமைத்து பாடியது அனைவரையும் கவர்ந்தது.

     இந்த நிகழ்ச்சியை குறித்து வேலூர் சிஎஸ்ஐ மத்திய வட்டார தலைவரும், ஒய்.எம்.சி.ஏ. சமய குழு கூட்டுனரும், வேலூர் விருதம்பட்டு ஆல்காட் திருச்சபையின் தலைமை ஆயருமான மேனன் கூறியதாவது,

      இயேசுபிரான் இந்த மண்ணில் பிறந்தபொழுது இறைதூதர்கள் விண்ணிலிருந்து இறங்கி வந்து இந்த உலகோருக்கு மகிழ்ச்சியும், ஆனந்தமும், அனைவருக்கும் அமைதியும், சமாதானமும் உண்டாவதாக என்று பாடலை பாடி இயேசுவின் பிறப்பை இந்த உலகத்திற்கு அறிவித்தார்கள். அதனை நினைவு கூறும் வகையில் இந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.

     இந்த நிகழ்வை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து இருந்த ஒய்.எம்.சி.ஏ. நிர்வாக செயலாளர் ஜார்ஜ்பிரின்ஸ் ஏற்பாடுகளை மிக நேர்த்தியாய் செய்திருந்தார். இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக அகஸ்டின்பால்சுதன், ஒய்.எம்.சி.ஏ செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் பாபி ஆகியோர் பங்கெடுத்தனர். அனைவருக்கும் மிக சிறப்பான வாழ்த்துக்களும், பரிசு கோப்பைகளும், நினைவு கோப்பைகளும் வழங்கப்பட்டது. விழா வெகு விமரிசையாக, வரலாற்று சிறப்புமிக்க வகையில், வேலூர் வியந்து போகும் வகையில் நடைபெற்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

     இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் இயேசு கிறிஸ்து உலகில் மனிதனாகப் பிறந்தார். மகிமை தந்தார். எல்லோரும் இன்புற்று வாழ்வதற்கு வழிகாட்டினார். ஆசிர்வாதத்தை அளித்தார் என்பதை இன்னிசை பாடல்கள் மூலம் இந்த உலகில் உள்ளோர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

     இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சம் என்னவென்றால், வேலூர் தென்னிந்திய திருச்சபை பேராய தந்தை ஹென்றிசர்மாநித்தியானந்தம் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தொடக்க உரை, ஆசி உரையாற்றி 25 குழுக்களுக்குமான பரிசு பதாகைகளை வழங்கி பாராட்டினார்.

     ஆண்டுதோறும் நடக்கின்ற இந்த நிகழ்வு இந்த ஆண்டு டீபோர் வளாகத்தில் உள்ள முனைவர் ஜெயகரன் ஐசக் உள்விளையாட்டு அரங்கில் மிக சிறப்பான வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

     இந்த நிகழ்வு இப்பகுதியில் உள்ள மக்களுக்கு மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு ஆண்டவரின் அன்பை சுமந்து செல்கின்ற ஒரு நிகழ்வாக உள்ளது என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். ஆண்டவர் உங்கள் அனைவருக்கும் இறையாசிகளை வழங்க வேண்டும் என்ற பிரார்த்தனை ஏறெடுக்கப்பட்டது.

     இந்த செய்தியை ஊடகத்தின் வாயிலாக ஒளிபரப்பி கொண்டு இருக்கின்ற நியூஸ்-24 நிறுவனத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தன்னுடைய உரையில் ஆயர் டி.எஸ்.சி.மேனன் தெரிவித்தார்.

      ஒய்.எம்.சி.ஏ. ஹெல்த் அண்ட் ஹெல்தி லிவிங் சென்டர் எக்ஸிக்யூட்டிவ் செகரட்டரி ஜார்ஜ்பிரின்ஸ் கூறியதாவது,

     ஒய்.எம்.சி.ஏ. நேஷனல் கவுன்சிலிங்-ன் ப்ராஜெக்ட் ஆக செயல்படுகிறது. இங்கு நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்வானது வருடம்தோறும் நாங்கள் நடத்திக் கொண்டுள்ளோம். அந்த வகையில் கிறிஸ்துமஸ் கேரல் - 2023 ஆண்டிற்கான விழாவாக அமைந்தது.

     எங்களுடைய நேஷனல் பிரசிடெண்ட் டாக்டர் வின்சென்ட்ஜார்ஜ்  ஆசியுடனும், நேஷனல் ஜெனரல் செகரட்டரி சுந்தர்சிங்பர்ணபாஸ் ஆசியுடனும், எங்களுடைய ஒய்.எம்.சி.ஏ. ஹெல்த் அண்ட் ஹெல்தி லிவிங் சென்டர் சேர்மன் ஸ்வீட்டிபிரேம்குமார் மற்றும்  வைஸ்சேர்மன் டாக்டர் ஸ்டீபன்ராஜ் மற்றும் கமிட்டி மெம்பர் ஜகதாஸ்பாண்டியன் ஆகியோரின் ஆசியுடன் சிறப்பாக நடைபெற்றது.

     இந்த நிகழ்வில் வேலூரில் அமைந்துள்ள 25-க்கு மேற்பட்ட குழுக்கள் மற்றும் திருச்சபை மக்கள் பங்கேற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். ஒவ்வொரு வருடமும் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மகிமைப்படுத்த கூடிய வகையில் கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை அறிவிக்கக்கூடிய வகையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாங்கள் இதனை நடத்திக் கொண்டுள்ளோம். இதன் மூலமாக ஆண்டவரின் நாமம் மகிமைப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம் என்று பேசினார்.

     கிறிஸ்துமஸ் கேரல்ஸ் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேராயர் ஹென்றிசர்மாநித்தியானந்தம் கிறிஸ்மஸ் செய்தியாவது,  

     அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை சொல்வதோடு பெண் குழந்தைகளை ஆசீர்வதித்து அவர்களை வணங்கி பெண் குழந்தைகளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது பார்க்கின்றபோது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மண்ணுக்குள் இருப்பது ஈரம். பெண்ணுக்குள் இருப்பது வீரம். நீங்கள் எல்லோரும் வீரம் வாய்ந்தவர்களாக உள்ளீர்கள். வைரம் பாய்ந்தவர்களாக எதிர்காலத்தில் நீங்கள் இருக்க வேண்டும் என்று உங்களை எல்லாம் வாழ்த்துகின்றேன். நிகழ்ச்சியை சிறப்பாக செய்துள்ள மத்திய குழு தலைவர் மேனன், ஒய்.எம்.சி.ஏ. நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். இந்நிகழ்ச்சி நடைபெறும் இடம் சிறப்புக்குரியது.

     கிறிஸ்மஸ் நமக்கு மட்டுமல்ல. எல்லோருக்கும் கிறிஸ்மஸ். கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல. எல்லோருக்கும் கிறிஸ்மஸ். எல்லோருக்கும் நற்செய்தி. மிக குறிப்பாக ஏழை, எளிய மக்களை பாதுகாக்க வேண்டும். அவர்களின் சுக, துக்கங்களை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒன்றுமில்லாதவர்களை நாம் ஆதரிக்க வேண்டும்.

     கிறிஸ்மஸ் என்பது நம்மை அழைக்க முடியாத, வலிமையற்ற மக்களை நாம் அழைத்து அவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும். உடை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு நன்மைகளை செய்ய வேண்டும். நல்ல செய்திகளை கூற வேண்டும். அப்போதுதான் அது நமக்கு கிறிஸ்மஸ்-ஆக அமையும். ஒய்.எம்.சி.ஏ.-வின் இந்த விழாவை பாராட்டுகிறேன். கொரோனா காலத்தில் எதுவும் நடைபெறாத நிலையில், 100 நாளில் இந்த அரங்கத்தை மக்களுக்காக உருவாக்கி வைத்துள்ளோம். இதனை நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தனது உரையில் கூறினார்.

     இந்த நிகழ்ச்சியை வேலூர் சிஎஸ்ஐ மத்திய வட்டார தலைவரும், ஒய்.எம்.சி.ஏ. சமய குழு கூட்டுனரும், வேலூர் விருதம்பட்டு ஆல்காட் திருச்சபையின் தலைமை ஆயருமான மேனன் ஒருங்கிணைத்து மிகச் சிறப்பாக செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.