• வேலூர் டிகேஎம் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட களப்பணி.

 ·         வேலூர் டிகேஎம் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட களப்பணி.

·         மாணவிகளுக்கு தூய்மை இந்தியா திட்டத்தில் நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் சுகாதாரம், சுற்றுச்சூழல், மருத்துவம், கல்விசெய்முறை விளக்க பயிற்சி.

            வேலூர் மாவட்டம், பெரியசேக்கனூர் ஊராட்சியில் வேலூர் பெண்கள் தனபாக்கியம் கிருஷ்ணசாமி கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட களப்பணி மாணவிகளுக்கு இன்று தூய்மை இந்தியா திட்டத்தில் நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் சுகாதாரம், சுற்றுச்சூழல் மருத்துவம், கல்வி, சமூக பாகுபாடு இல்லாமல் சமூகப் பிரச்சனை இல்லாமல் இவற்றுக்கெல்லாம் செய்முறை பயிற்சியோடுஏன் கழிவறை அவசியம்”திடக்கழிவு மேலாண்மை மேம்படுத்தினால் நாடு எவ்வாறு மேன்மை அடையும்”, மரம் வளர்த்தலின் நன்மைகள், புகைபிடித்தலில் தீமைகள் மற்றும் நாட்டு நடப்புகள் பற்றி களத்தில் செய்ய வேண்டிய கை கழுவும் சர்வதேச தினம் செய்முறை விளக்கத்தோடு விளக்கப்பட்டது.

            கழிவறை தினத்தை ஏன் அனுசரிக்க வேண்டும் என்பதையெல்லாம் விளக்கமாக கூறப்பட்டு புரிந்து கொள்கின்ற அளவுக்கு உடல் ஆரோக்கியத்தை பற்றியும் முகாமில் பேசப்பட்டது.

            மேற்பட்ட பயிற்சி முகாமில் கருத்தரங்கத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க துணைதலைவரும், காட்டுப்புத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், சுகாதாரத்துக்காக, நீர் மேலாண்மைக்காக, மக்கள் ஆரோக்கியத்திற்காக கல்வியை சிறப்பாக ஊராட்சியில் அமல்படுத்தியதற்காக இதுவரை 62 விருதுகளைப் பெற்று விளக்க உரையாற்றி கொண்டிருக்கின்ற கே.விஸ்வநாதன் உரை நிகழ்த்தினார். மாணவிகள் மிகவும் பயனுள்ளதாகவும் வாழ்நாளில் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியத்தையும், கிராமங்களில் மேற்கொள்ள கூடிய, நகரங்களில் மேற்கொள்ள கூடிய தூய்மை இந்தியா திட்டத்தினுடைய நோக்கங்களை புரிந்து கொண்டதாகவும் பாராட்டு தெரிவித்தனர்.

            கல்லூரி பேராசிரியர்கள் வெகு சிறப்பாக நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.