• தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி கூட்டம்.

  • தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு  இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம்  நடைபெற்ற மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், கூடுதல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி கூட்டத்தில் வேலூர் மாவட்ட  தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றார்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம்  நடைபெற்ற மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், கூடுதல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி கூட்டத்தில் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றார். 

                இக்கூட்டத்தில்  சட்ட ஒழுங்கு, தேர்தல் மேலாண்மை, தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் (Sveep), சமூக வலைதளங்களில் வரும்  செய்திகளின் உண்மை தன்மை அறிவது, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு, தேர்தல் செலவினங்களை கண்காணிப்பு, தேர்தல் விதிமுறைகள், பதற்றமான வாக்கு சாவடிகள், மாவட்ட தேர்தல் மேலாண்மை திட்டம், வாக்குப்பதிவு இயந்திரங்கள், தபால் வாக்குகள்,  வாக்கு பதிவு தினம் முன்னேற்பாடுகள், வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்குவது, வேட்புமனு தாக்கல், திரும்ப பெறுதல், தகுதிகள், பொறுப்பு அலுவலர்களின் (Nodal Officer)  பணிகள் குறித்து  இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பூ.காஞ்சனா, மாநகராட்சி ஆணையாளர் இரா.லெட்சுமணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 





Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.