• தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் வேட்பாளர்கள் தேர்தல் செலவினம்.

·     தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் செலவினம் இறுதி கணக்கு தாக்கல் செய்வற்கான பயிற்சி கூட்டம் - வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சி தலைவர் தலைமையில்   நடைபெற்றது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் பிரிவு 77-ன்படி சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும் வேட்பாளருக்கு ரூ.40,00,000/- (ரூபாய் நாற்பது லட்சம் மட்டும்) அதிகபட்ச தேர்தல் செலவினமாக, இந்திய தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.

(தேர்தல் நடைமுறைச் சட்டம் 1951-இன் பிரிவு 78) வேட்பாளர்கள், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள், தேர்தல் செலவுகள் பதிவேட்டுடன் (தேர்தல் நடைமுறைச் சட்டம் 1951-இன் பிரிவு 78) தங்களது தேர்தல் செலவுக் கணக்குகளை தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்ய வேண்டும்.

 அதன்படி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ல் வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் செலவினம் இறுதி கணக்கு தாக்கல் செய்வற்கான பயிற்சி கூட்டம் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இப்பயிற்சி கூட்டத்தில் வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும்  பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது.

   வேட்பாளர் தனது தினசரி கணக்குப் பதிவேடு. (ABC Register), பில்கள் (Bills) மற்றும் வவுச்சர்கள் (Vouchers) மற்றும் அதற்கான உறுதிமொழிப் பத்திரம் (Affidavit) ஆகியவற்றுடன் இணைப்பு-E2-ல் உள்ள சுருக்க அறிக்கையை (Abstract Statement) சமர்ப்பிக்க வேண்டும்.

  தேர்தல் செலவினங்களின் சுருக்க அறிக்கை, வேட்பாளரால் திரட்டப்பட்ட நிதியின் ஆதாரங்களின் சுருக்கம், பிரமாணப் பத்திரப் படிவம், பொதுக்கூட்டம், பேரணி, ஊர்வலம்      முதலியவற்றுக்கான செலவுகள். நட்சத்திர பேச்சளர்களுடன் பொதுக்கூட்டம், பேரணி,  ஊர்வலம்  முதலியவற்றுக்காக வேட்பாளருக்கு பிரித்துக் கொடுக்கப்பட்ட செலவுத் தொகை, துண்டுப் பிரசுரங்கள், சிறு வெளியீடுகள், சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள், பதாகைகள், கட்-அவுட்கள், வாயில்கள் மற்றும் வளைவுகள் போன்ற பிரச்சாரப் பொருட்களுக்கான செலவின விவரங்கள். அச்சு மற்றும் கேபிள் வலையமைப்பு, மொத்தமாக SMS அனுப்புதல், டிவி மற்றும் ரேடியோ போன்ற மின்னணு ஊடகங்கள் மூலம் வேட்பாளர் விளம்பரத்திற்கான செலவின விவரங்கள், வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரத்திற்கான வண்டிகள், வாக்குப்பதிவு  நாளன்று பயன்படுத்திய வண்டிகள் ஆகியவற்றிற்கான செலவின விவரங்கள், பிரச்சார பணியாளர்கள் மற்றும் முகவர்களுக்கான செலவின விவரங்கள், தேர்தல் பிரச்சாரத்துக்கான பயன்படுத்தப்பட்ட சொந்த பணம் குறித்த விவரங்கள், தேர்தல் செலவினத்திற்காக கட்சியிடமிருந்து பெறப்பட்ட பணம் குறித்த விவரங்கள், தேர்தல் செலவினத்திற்காக பிறநபர்கள் அல்லது அமைப்புகளிடமிருந்து, கடன் / அன்பளிப்பு / நன்கொடையாக பெறப்பட்ட பணம் குறித்த விவரங்கள், செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி சேனலில் குற்றப் பின்னணிகளை வெளியிடுவதற்காக ஏதேனும் செலவிடப்பட்டிருந்தால், அதன் விவரங்கள். மெய்நிகர் (Virtual Campaign) பிரச்சாரத்தில்  ஏற்பட்ட  தேர்தல்  செலவுகளின்  விவரங்கள் ஆகியவற்றை  அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.

செலவின பார்வையாளரால் ஆய்வு செய்யப்பட்ட தினசரி தேர்தல் செலவினக் கணக்குப் பதிவேட்டின் அசல் (Original) பிரதி, வவுச்சர்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.  அனைத்து பில்களிலும் வவுச்சர்களிலும் வேட்பாளர் அல்லது அவரது தேர்தல் முகவர் கையொப்பமிட வேண்டும்.

                சுருக்க அறிக்கையின் பகுதி I முதல் IV வரை மற்றும் அட்டவணைகள் 1 முதல் 11 வரை வேட்பாளர் நேரடியாகக் கையொப்பமிட வேண்டும். வேட்பாளர் அல்லது அவரது தேர்தல் முகவரால் சான்றளிக்கப்பட்ட வங்கி கணக்கு அறிக்கையின் நகல்   (Bank Statement) இணைக்கப்பட வேண்டும்

                நிர்ணயிக்கப்பட்ட வடிவத்தில் உள்ள உறுதிமொழிப் பத்திரத்தில் (Affidavit) வேட்பாளர் கையொப்பமிட்டுச் சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் செலவுக் கணக்குகள் பெறப்பட்ட தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிட்டு, மாவட்டத் தேர்தல் அதிகாரியால் நியமிக்கப்பட்ட அலுவலர் ஒப்புதல் (Acknowledgement) வழங்க வேண்டும்.

            பதிவேடு ஆய்வின்போது செலவினப் பார்வையாளர் அல்லது RO சுட்டிக்காட்டிய ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், அதற்கான விளக்கத்தையும் காரணத்தையும் தனியாக இணைக்க வேண்டும். தேர்தல் செலவினம் தொடர்பாக RO வழங்கிய நோட்டீஸ்கள் மற்றும் அதற்கு வழங்கப்பட்ட விளக்கங்களின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.

                குற்ற வழக்கு தொடர்புடைய வேட்பாளர்கள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியில் மூன்று முறை விளம்பரம் செய்யப்பட்ட செலவின விவரங்களை Schedule--10  ஆகியவற்றையும் தாக்கல் செய்ய வேண்டும். இந்த அட்டவணைகளில், பல்வேறு இனங்களுக்காக வேட்பாளர், கட்சி அல்லது மற்றவர்களால் செய்யப்பட்ட செலவுகள் மற்றும் வேட்பாளருக்கான நிதி ஆதாரம் ஆகியவை காட்டப்பட வேண்டும். அனைத்துப் பகுதிகளும் அட்டவணைகளும் முறையாக நிரப்பப்பட வேண்டும்; ஏதேனும் ஒரு பகுதி பொருந்தவில்லை என்றால், வேட்பாளர் 'Nil'  அல்லது Not applicable என எழுத வேண்டும்.

             சரியற்ற அல்லது உண்மைக்குப் புறம்பான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது, ஆணையத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட வழிவகுக்கும். இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 10A-ன் கீழ், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலோ அல்லது மாநில சட்டமன்றங்களிலோ உறுப்பினராக இருப்பதற்கும், போட்டியிடுவதற்கும் 3 ஆண்டுகளுக்குத் தகுதி நீக்கம் செய்யப்படக் காரணமாக அமையலாம்.

           கணக்குகளைப் பெறும் மையத்தில் உள்ள அலுவலர், வேட்பாளர் அல்லது முகவர் சமர்ப்பிக்கும் கணக்குகள் முழுமையாக உள்ளனவா என்பதையும், வேட்பாளரால் முறையாகச் சான்றளிக்கப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்க்க வேண்டும். தேர்தல் முகவரின் சான்றிதழ் மட்டும் போதுமானதல்ல.

             தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் தகுந்த காரணமின்றி வேட்பாளர் தனது தேர்தல் செலவுக் கணக்கைச் சமர்ப்பிக்கத் தவறினால், மாவட்டத் தேர்தல் அதிகாரி (DEO) தானாக முன்வந்து (Suo motu) வேட்பாளரிடம் விளக்கம் கேட்டு, அந்த விளக்கத்தையும் தனது பரிந்துரையையும் சேர்த்து ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பலாம்.

       கணக்குச் சரிபார்ப்புக் கூட்டம் நடத்தப்பட்ட பிறகும், வேட்பாளர் தாக்கல் செய்த கணக்குகளில் முரண்பாடுகள் நீடித்தால், DEO தனது ஆய்வறிக்கையை (Scrutiny Report) ஆணையத்திற்கு அனுப்பப்படும். அதனுடன் தனது பரிந்துரைகள், DEMC உத்தரவு, பதிவேடுகளின் சான்றளிக்கப்பட்ட நகல்கள், பில்கள், வவுச்சர்கள் மற்றும் இதர ஆதாரங்களை இணைக்க வேண்டும்.

       மாவட்ட தேர்தல் அதிகாரியின் (DEO) ஆய்வறிக்கை இறுதி செய்யப்பட்ட மூன்று நாட்களுக்குள், தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் ஸ்ரீதர் (கணக்கு), பாஸ்கரன் (தேர்தல்),  வேலூர் வருவாய் கோட்டாட்சியர் ஏ.செந்தில்குமார், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சி.மாறன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் உட்பட  பலர் கலந்து கொண்டனர். 

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.