• வேலூர் மாவட்டத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்.

  • வேலூர் மாவட்டத்தில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் - மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்து, 25 வேலை நாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
  • இம்முகாமில்  3,572 வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு, 1,364 நபர்கள் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர்.

வேலூர் மாவட்ட ம்,  காட்பாடி, விஐடி பல்கலைகழகத்தில்  வேலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ். லீலாஅலெக்ஸ் தொடங்கி வைத்தார்.

படித்த இளைஞர்கள் பல்வேறு தனியார் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களை பெற்றிட ஏதுவாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள், மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக செயல்படுகின்ற தன்னார்வ பயிலும் வட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும்  தேர்வுகளுக்கு  கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்  நடத்தப்படுகிறது.

விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 177 முன்னனி தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான நபர்களை தேர்ந்தெடுத்தனர். இந்த மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் 2,366 ஆண்கள், 1,186 பெண்கள் என மொத்தம் 3,552 வேலை நாடுநர்களும், 20 மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்களும் கலந்து கொண்டு  தங்களுடைய விவரங்களை பதிவு செய்துள்ளனர். இவர்களில் 753 ஆண்கள், 608 பெண்கள், 3 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 1,364 நபர்களுக்கு தனியார் நிறுவனங்கள் சார்பில்  பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.  மேலும் 323 ஆண்கள், 173 பெண்கள் என மொத்தம் 496 நபர்கள் இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு தேர்வாகி உள்ளனர். 5 நபர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சிக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக மாவட்ட ஆட்சி தலைவர் இந்த வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்து, இம்முகாமில் கலந்து கொண்டுள்ள தனியார் நிறுவனங்களின் தேர்வு முறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இன்று நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பல்வேறு நிறுவனங்களில் தேர்வான 25 வேலை நாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து.சுரேஷ், உதவி இயக்குநர் (மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம்) க.காந்தி, மாவட்ட மாற்று திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு, வேலூர் வருவாய் கோட்டாட்சியர்  ராம்குமார், காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி  உட்பட பலர் உடனிருந்தனர்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.