• காட்பாடி பள்ளியில் காலை உணவுத் திட்டம்.

·        சென்னையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்  விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்ததை தொடர்ந்து காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் மாணவ, மாணவிகளுக்கு காலை  உணவினை வழங்கி தொடங்கி வைத்தார்.

சென்னையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்  விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய், தொடங்கி வைத்ததை தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ், காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவினை வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர், மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவருந்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம்  அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ செல்வங்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்து, தொடங்கி வைக்கப்பட்டது.  

இத்திட்டத்தின் மூலம் வேலூர் மாவட்டத்தில், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகிய பகுதிகளில் ஏற்கனவே 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 38,100 மாணவர்கள் பயனடைகின்றனர். தற்போது விரிவாக்கம் செய்யப்படுவதன் மூலம் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 36,963 மாணவர்கள் பயனடைவார்கள். இத்திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 921  பள்ளிகளில் பயிலும் 75,063 மாணவர்கள் பயனடைவார்கள்.

இந்நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சி ஆணையாளர் கேத்தரின்சரண்யா, காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் மரு.ம.சுதாகர், மாநகராட்சி துணைமேயர் மா.சுனில்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா, 1வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாமன்ற உறுப்பினர் அன்பு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.