• வேலூர் சுற்றுலா இடங்கள் சர்வதேச வீடியோ.
· வேலூர் மாவட்ட சுற்றுலா இடங்கள் குறித்து விரைவில் சர்வதேச அளவில் கொண்டு செல்லும் நோக்கில் வீடியோ வெளியிடவுள்ளோம்.
· இயற்கை சார்ந்த இடங்கள் குறித்து வேலூர் மாவட்ட மக்களும் கருத்துக்களை கூறலாம்
· உலக சுற்றுலா தின விழா போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள், சான்றுகளை வழங்கி வேலூர் மாவட்ட ஆட்சியர் பேச்சு.
வேலூர் மாவட்டம், வேலூர், கோட்டைவெளி பூங்காவில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலா துறை சார்பில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான ஓவிய போட்டிகள், மாணவர்களுக்கான பேச்சு போட்டிகள், நாடகம் மற்றும் வில்லுப்பாட்டு ஆகிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் திரளான மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்ஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் லீலாஅலெக்ஸ் பரிசுகள் மற்றும் சான்றுகளை வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்ஸ் பேசுகையில்,
வேலூரின் பெருமையை சர்வதேச அளவில் பேச வேண்டும் என்ற வகையில், வேலூர் சுற்றுலாவை மையப்படுத்தி ஒரு காணொளியை உருவாக்க உள்ளோம். வேலூரின் சிறப்புகளை மக்களும் சொல்லி அதனை வீடியோவாக, போட்டோவாக அனுப்புங்கள். மக்களின் கருத்துகளும் அவசியம். வேலூர் கோட்டையுடன் சுற்றுலா நின்றுவிடாமல் இயற்கை சார்ந்த வேலூரின் பல இடங்களையும் வெளி உலகத்திற்கு கொண்டு செல்லுங்கள் என பேசினார்.

Comments
Post a Comment