• அனைத்து வணிகர்கள் சங்கம் மத்திய நிதி துறை-க்கு மின்னஞ்சல்.
· யுபிஐ. பண பரிவர்த்தனைக்கு மத்திய அரசு பண பரிமாற்ற கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற கோரி அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் மத்திய நிதி துறை அமைச்சருக்கு மின்னஞ்சல் மூலம் கடிதங்களை வேலூர் தலைமை தபால் நிலையத்திலிருந்து அனுப்பினர்
வேலூர் மாவட்டம், வேலூரில் அனைத்து வணிகர் சங்கங்களின் சார்பில் தலைமை தபால் நிலையத்திலிருந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்-க்கு மின்னஞ்சல் மூலம் கடிதங்கள் அனுப்பும் நடவடிக்கை வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் மண்டல தலைவர் ஞானவேல் தலைமையில் நடைபெற்றது.
மத்திய அரசு யுபிஐ (UPI) மூலம் பண பரிவர்த்தனைகள் செய்வதற்கு கட்டணங்கள் செலுத்த வேண்டுமென தற்போது அறிவித்துள்ளது. இது வியாபாரிகளை பெரிதும் பாதிப்பதுடன், பொதுமக்களையும் பாதிக்கும்.
யுபிஐ பண பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கும் முடிவை மத்திய அரசும், மத்திய நிதி அமைச்சரும் உடனே திரும்ப பெற வலியுறுத்தி இந்த மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டது.
இதில் நிர்வாகிகள் குமார், அமீன் அகமது ஆலியார், அருண்பிரசாத், பிச்சாண்டி, அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Comments
Post a Comment