• மதுபானங்களை பாட்டிலில் விற்க கூடாது - விவசாயிகள் மனு.
· பேர்ணாம்பட்டு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு.
· மதுபானங்களை பாட்டிலில் விற்க கூடாது என விவசாயிகள் மனு.
வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில பொதுசெயலாளர் உதயகுமார் தலைமையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மனு அளித்தனர்.
அதில் பேர்ணாம்பட்டு பகுதியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சின்னதாமல்செருவு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பேர்ணாம்பட்டு நகராட்சி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை அங்கு அமைக்கவுள்ளனர். இதனால் நிலத்தடி நீர் மாசடைந்தும் சுற்றுசூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. மேலும் வஜ்ஜிரம் தோல் தொழிற்சாலை கழிவுகளும் இப்பாசன நிலத்தடி நீருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏரியிலும் இந்த தண்ணீரை விடுவதால் பாதிப்பு ஏற்படுகிறது.
இதேபோல் வெளிநாட்டு மது வகைகள் அரசு மதுபான கடையில் பாட்டிலில் விற்பதால் அதனை குடித்துவிட்டு விவசாய விளைநிலங்களில் பாட்டிலை வீசி செல்கின்றனர். இதனால் விவசாய விளை நிலங்களில் விவசாயிகள் பயிர் செய்யும்போது அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. மேலும் விவசாய உழவு கருவிகளும் சேதமடைகிறது. எனவே பாட்டில்களில் மது விற்பனை செய்யப்படுவதை தடை செய்ய வேண்டுமென கேட்டு கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

Comments
Post a Comment