• குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை.
- குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் இளைஞர் நீதி குழுமத்திற்கு தற்காலிக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஒரு இளநிலை உதவியாளர் கலந்த பதிவறை எழுத்தர் மற்றும் ஒரு அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு வேலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது - மாவட்ட ஆட்சி தலைவர்.
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் இளைஞர் நீதி குழுமத்திற்கு தற்காலிக தொகுப்பூதியத்தின் ஒரு இளநிலை உதவியாளர் கலந்த பதிவறை எழுத்தர் மற்றும் அலுவலக உதவியார் பதவிகளுக்கு வேலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வித்தகுதி:
1. இளநிலை உதவியாளர் கலந்த பதிவறை எழுத்தர் - ஒரு பதவி
Junior Assistant - cum – Record Cleck.
(The Corresponding Qualification prescribed under the Madras High Court Service Rules, 2015)
- Pass in X Standard or its equivalent.
2. அலுவலக உதவியாளர் - ஒரு பதவி
Office Assistant.
(The Corresponding Qualification prescribed under the Madras High Court Service Rules, 2015)
- Pass in VIII Standard or its equivalent.
3. வயது:01.09.2026 அன்றுள்ளபடி 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4. தொகுப்பூதியம்:
இளநிலை உதவியாளர் கலந்த பதிவறை எழுத்தர்
Junior Assistant – cum – Record Cleck. - Rs.20,000/- (Per Month)
அலுவலக உதவியாளர்
Office Assistant. - Rs.13,000/- (Per Month)
மேற்குறிப்பிட்ட தகுதிவாய்ந்த நபர்கள் இப்பதவிக்கான விண்ணப்பம் மற்றும் தகவல்களை வேலூர் மாவட்ட இணையத்தில் http:/vellore.nic.in பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரினை விண்ணப்பிக்கும் உறையின் மீது எழுதி அனுப்பவேண்டும்.மேலும் ரூ.25/- அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட உறையினை விண்ணப்பத்துடன் இணைத்தனுப்பப்படவேண்டும்.
விண்ணப்பங்களை உரிய சான்றுகளின் ஒளி நகலுடன் 09.10.2026-ஆம் தேதிக்குள் “மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, (சுற்றுலா மாளிகை எதிரில்) அண்ணாசாலை, வேலூர்-632 001.” என்ற முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள், அஞ்சல் தாமதம் மற்றும் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் யாவும் முன் தகவலின்றி நிராகரிக்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment