• குழந்தைகள் நலன் தொடர்பான கூராய்வு கூட்டம்.

  • தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தலைமையில், வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் முன்னிலையில்  மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் குழந்தைகள் நலன் தொடர்பான கூராய்வு கூட்டம்  நடைபெற்றது.

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் புதுக்கோட்டை விஜயா தலைமையில், வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் முன்னிலையில் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் குழந்தைகள் நலன் தொடர்பான கூராய்வு கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி துறை, சமூக நலத்துறை, காவல் துறை, குழந்தை தொழிலாளர் துறை, சுகாதாரத்துறை,  இளைஞர் நீதிக்குழுமம், குழந்தைகள் நலக்குழுமம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அகு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்,  மாவட்ட மாற்று திறனாளிகள் நலத்துறை, மாவட்ட குழந்தை உதவி மையம் 1098 ஆகிய துறைகளுடன் குழந்தைகளின் உரிமை (ம) பாதுகாப்பு, குழந்தைத் திருமணம் நடத்தப்படுவது தடுத்தல், பள்ளி இடைநிறுத்தலைத் தடுத்தல், இலவசம் (ம) கட்டாயக் கல்வி அளித்தல், போக்சோ வழக்குகள், இளம்பருவக் கர்ப்பம், நிதி ஆதரவுத் திட்டம் மற்றும் அன்பு கரங்கள் திட்டம் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்கள் டாக்டர். மோ.கசிமீர் ராஜ், டாக்டர்.மோனா மட்டில்டா பாஸ்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.உ.சிவராமன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிரியா, மாவட்ட குழந்தை பாதுகாப்பு  அலுவலர் கோ.விஜயா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா உட்பட பலர் கலந்து  கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.