• காந்தி ஜெயந்தி தினம் கிராம சபை கூட்டம்.
- 02.10.2026 காந்தி ஜெயந்தி தினத்தன்று வேலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சி தலைவர்.
02.10.2026 காந்தி ஜெயந்தி தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டுமென தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளதை தொடர்ந்து, வேலுார் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 02.10.2026 காந்தி ஜெயந்தி தினத்தன்று காலை 11.00 மணியளவில் தவறாமல் கிராம சபை கூட்டம் கூட்டப்பட வேண்டுமென அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இக்கிராம சபை கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய பொருள்கள் விவரம்.
|
பொருள் 1 |
: |
கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல் |
|
பொருள் 2 |
: |
தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல் |
|
பொருள் 3 |
: |
பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம்(VB-GRAM(G)) |
|
பொருள் 4 |
: |
சிறுபாசன குளங்கள் மற்றும் ஏரிகள் புதுப்பித்தல் |
|
பொருள் 5 |
: |
ஜல் ஜீவன் திட்டம் |
|
பொருள் 6 |
: |
தூய்மை பாரத இயக்க(ஊரகம்) திட்டம் |
|
பொருள் 7 |
: |
கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை |
|
பொருள் 8 |
: |
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் – கிராம சபை கூட்டப்பொருள்-02.10.2026 |
|
பொருள் 9 |
: |
கிராம செழுமை மீட்சித் திட்டம் (VPRP) |
|
பொருள் 10 |
: |
கிராம செழுமை மீட்சித் திட்டத்தின் கீழ் பொது சொத்துக்கள், சேவைகள் மற்றும் வள மேம்பாட்டு திட்டம் |
|
பொருள் 11 |
: |
கிராம செழுமை மீட்சித் திட்டத்தின் கீழ் சமூக மேம்பாட்டு திட்டம் |
|
பொருள் 12 |
: |
லட்சாதிபதி சகோதரிகளை சமுதாய வள வல்லுனர்கள் மூலம் (பண்ணை) அடையாளம் கண்டு அவர்கள் பண்ணை மற்றும் பண்ணை சாரா வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வங்கி கடன் இணைப்பு பெறுவதற்கு ஆதரவு வழங்கிய விவரம் சமார்பிக்கப்படுகிறது. |
|
பொருள் 13 |
: |
உதவிக் சுய குழு தொழில் முனைவோர்களுக்கு உதயம் பதிவுடன் கூடிய தொழிற்சான்றிதழ் மற்றும் நிதி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது உதயம் பதிவு பெறவில்லை எனில் வட்டார அளவிலான மதி சிறகுகள் தொழில் மையத்தின் மூலம் பெற்று கொடுக்கப்பட்ட விவரம் சமார்பிக்கப்படுகிறது. ஒன்று அல்லது இரண்டு மூன்று ஊராட்சிகளில் ஒரே தொழிலை செய்யக்கூடிய சுய உதவி குழு தொழில் முனைவோர்களை கண்டறிந்து பத்து முதல் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொழில் குழுக்கள் ஆகவோ அல்லது தொகுப்புகள் ஆகவோ ஒருங்கிணைத்து அதன் விவரம் கிராம சபாவிற்கு சமர்பிக்கப்படுகிறது. |
|
பொருள் 14 |
: |
ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் தொழில் முனைவோருக்கு சமுதாய தொழில் முதலீட்டு நிதி வழங்கப்பட்டுள்ளது. |
|
பொருள் 15 |
: |
தொழில் முனைவோருக்கு பிரதமர் பிரதம மந்திரியின் உணவு முறைபடுத்துதல் திட்டத்தின் மூலம் நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உணவு தரச் சான்றிதழ் வட்டார அளவிலான மதி சிறகுகள் தொழில் மையத்தின் மூலம் பெற்று தர வேண்டும். |
|
பொருள் 16 |
: |
ஆடு வளர்ப்பு தொகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் விவரம் |
|
பொருள் 17 |
: |
மாடு வளர்ப்பு தொகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் விவரம் |
|
பொருள் 18 |
: |
மருத்துவப் பயிர் தொகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் விவரம் |
|
பொருள் 19 |
: |
மலர் சாகுபடி தொகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் விவரம் |
|
பொருள் 20 |
: |
பட்டுப்பூச்சி வளர்ப்பு தொகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் விவரம் |
|
பொருள் 21 |
: |
மீன் வளர்ப்பு தொகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் விவரம் |
|
பொருள் 22 |
: |
நாற்றங்கால் தொகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் விவரம் |
|
பொருள் 23 |
: |
விதை உற்பத்தி தொகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் விவரம் |
|
பொருள் 24 |
: |
பாரம்பரிய நெல் சாகுபடி தொகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் விவரம் |
|
பொருள் 25 |
: |
உணவகங்கள் அமைத்தல் |
|
பொருள் 26 |
: |
எழுது பொருட்கள் அங்காடி அமைத்தல் |
|
பொருள் 27 |
: |
எளிய ரசாயன வீட்டு உபயோக பொருட்கள் தொகுப்பு |
|
பொருள் 28 |
: |
சிறுதானியம் மற்றும் பாரம்பரிய அரிசி தின்பண்டம் தயாரித்தல் தொழில் தொகுப்புகள் |
|
பொருள் 29 |
: |
மண்பாண்டம் தொழில் தொகுப்புகள் |
|
பொருள் 30 |
: |
பனைப் பொருட்கள் மதிப்புக் கூட்டப்பட்ட தொழில் தொகுப்புகள் |
|
பொருள் 31 |
: |
தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் |
|
பொருள் 32 |
: |
ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (RSETI) |
|
பொருள் 33 |
: |
விருப்பமுள்ள 18 முதல் 50 வயதுள்ள பயனாளிகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து பயன்பெறுவது குறித்து தகவல் தெரிவித்தல். |
|
பொருள் 34 |
: |
சபாசார் வலைத்தளம் (SabhaSaar portal) - காந்தி ஜெயந்தி தின கிராம சபைக்கூட்டம் குறிப்பு (2026) |
|
பொருள் 35 |
: |
சீமைக்கருவேலம் ஒழிப்பு |
|
பொருள் 36 |
: |
பால் விவாஹ் முக்த் பாரத்” இயக்கத்தின் கீழ், குழந்தைத் திருமணமற்ற ஊராட்சியாக அறிவித்தல் மற்றும் குழந்தைத் திருமணத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உறுதி செய்தல் கிராம சபையின் பார்வைக்கும் ஒப்புதலுக்கும் வைக்கப்படுகிறது |
|
பொருள் 37 |
: |
இதர பொருட்கள்: (ஒவ்வொரு பொருளும் தனித்தனியாக எழுதி ஒப்புதல் பெற வேண்டும்) |
மேற்படி, கிராம சபை கூட்டங்களில் அனைத்து துறை உயர் அலுவலர்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ள மாவட்ட ஆட்சி தலைவர் உத்திரவிட்டுள்ளார். மேலும், கிராம சபை கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்தும், சிறப்பு மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்தும் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் உத்தரவிட்டுள்ளார்.
Comments
Post a Comment