• சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலக பயிற்சி துவக்க விழா.
· சிறை அதிகாரிகள் மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்தி அதற்கான நேரத்தினை செலவிட வேண்டும்.
· சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தின் பயிற்சி துவக்க விழாவில் சி.எம்.சி மருத்துவமனை இயக்குநர் பிஜு ஜார்ஜ் பேச்சு.
வேலூர் மாவட்டம், தொரப்பாடியில் உள்ள சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தில் சிறை அலுவலர்களுக்கான வாழ்க்கை மேலாண்மை குறித்து மூன்று மாதங்கள் பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.
சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தின் இயக்குநர் பிரதீப் தலைமையில் நடைபெற்ற விழாவில் பேராசிரியர் ப்யூலா மற்றும் ஆந்திரா, குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்த 22 சிறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இப்பயிற்சியினை வேலூர் சி.எம்.சி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பிஜுஜார்ஜ் துவங்கி வைத்தார்
இவ்விழாவில் சிஎ.ம்.சி மருத்துவமனை இயக்குநர் பிஜுஜார்ஜ் பேசுகையில், சிறைத்துறை அதிகாரிகளாகிய நீங்கள் மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்த வேண்டும். ஒரு நாளைக்கு பல மணி நேரம் சிறையினுள் பணி செய்யும் நீங்கள் உங்களின் உடல் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும். மன ஆரோக்கியத்திற்காகவும் நாட்களை ஒதுக்கி உங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை ஒதுக்குங்கள். உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாத்து கொள்ளுங்கள் என பேசினார்.

Comments
Post a Comment