அரியூர் நாராயணி செவிலியர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா.
· வாழ்க்கையில் எந்த நிலைக்கு உயர்ந்தாலும் தாய் தந்தையை மறவாதீர்கள்
- நீங்கள் வாழ அவர்கள் உழைப்பு முக்கிய பங்கு
- அரியூர் நாராயணி செவிலியர் கல்லூரியில் பட்டங்களை வழங்கி நடிகை சுகன்யா பேச்சு.
வேலூர் மாவட்டம், அரியூர், நாராயணி செவிலியர் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவானது நாராயணி மருத்துவமனையின் இயக்குநர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோத்கண்ணா, வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதிதிலகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகை சுகன்யா பங்கேற்று குத்து விளக்கேற்றி விழாவினை துவங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
இவ்விழாவில் நடிகை சுகன்யா பேசுகையில்,
நீங்கள் கல்வியை முடித்து நன்றாக பயின்று உங்கள் இலக்கை அடைந்துவிட்டீர்கள். இதற்கெல்லாம் காரணம் உங்களின் பெற்றோர்கள் தான். அவர்களின் உழைப்புதான் உங்களின் முன்னேற்றத்திற்கு காரணம்.
மேலும் இக்காலத்தில் மாஸ்க், கையுறை போன்றவைகள் உள்ளது. ஆனால் அக்காலத்தில் அவைகள் இல்லாதபோதுகூட குழந்தையை தாய் உள்ளத்துடன் பார்த்து பணிவிடை செய்து வளர்ப்பவர் தாய். ஆகவே நீங்கள் வாழ்க்கையில் உயர்ந்தாலும் உங்கள் தாய் தந்தையை மறக்க கூடாது. அவர்களை நன்றாக கவத்து கொள்ளுங்கள் என பேசினார்.

Comments
Post a Comment