• வேலூர் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு
- வேலூர் நகர்ப்புற பகுதிகளில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ், வேலூர் நகர்ப்புற பகுதிகளில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பினை நகர அரங்கில் தொடங்கி வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை - ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் வேலூர் மாவட்டம், வேலூர் நகர்ப்புறம் வட்டாரம் சார்பில் போஷன் அபியான் திட்டதின்கீழ் நடக்கும் மக்கள் பேரியக்க செயல்பாட்டின் ஒரு பகுதியாக 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியின் மூலம் தங்கமான 1000 நாட்கள், கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ கால பராமரிப்பு மற்றும் அவரது முக்கிய குடும்ப நபர்களுக்கும் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார பராமரிப்பு பின்பற்றுதலின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு தன் சுத்தம், சுகாதாரம் மற்றும் அங்கன்வாடி பணிகள், சேவைகள் பற்றி தகவல் அளிக்கப்படுகிறது. பிரதம மந்திரி மாத்ரு வந்தன யோஜனா மற்றும் ஜனனி சுரக்க்ஷா யோஜனா திட்டங்களில் அவர்களுக்கு கிடைக்கும் பயன்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அங்கன்வாடி மையத்தில் மூன்றாவது அல்லது நான்காவது மாத கர்ப்ப காலத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். தாய்சேய் பாதுகாப்பு அட்டையின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கபட்டது. கர்ப்பிணிப் பெண்ணிற்கு கர்ப்ப கால பரிசோதனைகளின் அவசியம் அவை ஏன் இன்றியமையாதது என்பதை பற்றியும், கர்ப்ப காலத்தில் எடை கண்காணிப்பதின் முக்கியத்துவத்தை அறியவும் மருத்துவமனை பிரசவத்தின் ஆலோசனை கூறியும், பேறு கால சிக்கல்களுக்கான விழிப்புணர்வு, அவைகளை அறிதல் மற்றும் எதிர்கொள்ளுதல் பற்றி விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
கர்ப்ப காலத்தில் சாப்பிட்டதற்கு பிறகு ஒரு இரும்பு சத்து மாத்திரை உட்கொள்வதை உறுதி செய்தல் பற்றியும், உரிய நேரத்தில் இரண ஜன்னி தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்குதலை உறுதி செய்யவும், சுண்ணாம்பு சத்து மாத்திரை மற்றும் அயோடின் உப்பின் நன்மைகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
சத்தான உணவு மற்றும் ஆரோக்கியமான உணவை சாப்பிடுதல் மற்றும் கர்ப்ப காலத்தில் எடையானது 10 முதல் 12 கிலோ எடை அதிகரித்தல், கடைசி ஆறு மாத கர்ப்ப காலத்தில் மாதத்திற்கு ஒரு கிலோ கூடுதல் குறித்து இந்நிகழ்ச்சியின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு நலங்கு வைக்கப்பட்டு, சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் ஐந்து வகையான கலவை சாதத்துடன் கூடிய ஊட்டச்சத்து உணவு அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் மு.ம.வினோத்கண்ணன், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.விஜய் சந்திரன், மகளிர் திட்ட இயக்குநர் ஜெயசுதா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுமதி, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் ராம்குமார், வேலூர் நகர்ப்புற குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அ.சந்தானலெட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment