• காட்பாடி வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு.

  • காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

                வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் The Hope House, குளம் அமைக்கும் பணி, பள்ளி, துணை சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார்.

                மாவட்ட ஆட்சி தலைவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியம், கரிகிரி பகுதியில் செயல்பட்டு வரும் The Hope House குழந்தைகள் இல்லத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வின்போது சிறப்பு தத்து நிறுவனம் எவ்வாறு செயல்படுகிறது என்றும்,  வழிமுறைகள் பற்றியும், பாதுகாப்பு பராமரிப்பு பற்றியும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  மேலும் தத்து செல்ல அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் விவரம் மற்றும் உள்நாடு, வெளிநாடுகளுக்கிடையே தத்து அனுமதிக்கப்பட்டது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தத்து வழங்கப்பட்ட குழந்தைகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் பின்தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து, காட்பாடி ஊராட்சி ஒன்றியம், பிரம்மபுரம் ஊராட்சியில்  VB-GRAM (G) திட்டத்தின்கீழ் ரூ.19.50 இலட்சம் மதிப்பில்  குளம் அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து  பிரம்மபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.1.48 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 6 வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பள்ளியில் சமையற்கூடத்தில் பார்வையிட்டு,  உணவு பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து  ஆய்வு செய்தார்

பின்னர், காட்பாடி ஊராட்சி ஒன்றியம், பிரம்மபுரம் ஊராட்சியில் ரூ.45 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, டி.கே.புரம் ஊராட்சி, உண்ணாமலை சமுத்திரம் கிராமத்தில் பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் அப்பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நடைபெற்று வரும் மருத்துவ முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  

அதனைத் தொடர்ந்து உண்ணாமலை சமுத்திரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, குழந்தைகளின் எண்ணிக்கை, எடை, உயரம், ஊட்டச்சத்து நிலை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் உண்ணாமலைசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை பார்வையிட்டு, மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை சுவைத்து பார்த்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிரியா, மாவட்ட சமூக நல அலுவலர் உமா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விஜயா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.விஜய் சந்திரன், காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் வின்செண்ட் ரமேஷ்பாபு, கண்டிப்பேடு ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி, பிரம்மபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன், டி.கே.புரம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.