• வேலூரில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.

·         தமிழ்நாடு முதலமைச்சர் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.·         வேலூரில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் திட்டத்தை தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு  தங்க மோதிரங்களை அணிவித்து சிறப்பித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை (2026-27) தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, வேலூர் பென்ட்லேண்ட் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் திட்டத்தை தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு  தங்க மோதிரங்களை அணிவித்து சிறப்பித்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தாய்மையின் மகத்துவத்தையும், குழந்தைப் பிறப்பின் பெருமையையும் உணர்த்தவும், அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் குழந்தைப் பிறப்புகளை அதிகரிக்கவும், பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனைகளின் மீதுள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தவும் “தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம்” சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்கப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின்கீழ் பென்ட்லேண்ட் மருத்துவமனைக்கு 3,420 மோதிரங்களும், குடியாத்தம் மருத்துவமனைக்கு 1,120 மோதிரங்களும் வந்துள்ளன. வேலூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,864 தாய்மார்களுக்கு இத்திட்டத்தின்கீழ் மோதிரம் வழங்கப்பட உள்ளது. இதில் பென்ட்லேண்ட் மருத்துவமனையில் 958 தாய்மார்களுக்கும், குடியாத்தம் மருத்துவமனையில் 906 தாய்மார்களுக்கும் வட்டம் வாரியாக பிரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. நாள்தோறும் காலை 25 தாய்மார்கள், மாலை 25 தாய்மார்கள் என்ற அடிப்படையில் அழைப்பிதழ் வழங்கி அழைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டு, தாய்மார்களுக்கு மகப்பேறு மருத்துவராலும், குழந்தைகளுக்கு குழந்தைகள் நல மருத்துவராலும் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு மோதிரம் வழங்கப்படும். இனிமேல் பிறக்கும் குழந்தைகளின் தாய்மார்களுக்கு அந்தந்த அரசு மருத்துவமனையிலேயே மோதிரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

22.06.2026 அன்று காலை 12.00 மணி முதல் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிருடன் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற, கீழ்க்கண்ட ஆறு தமிழ்நாடு குடியிருப்பு அடையாள சான்றுகளில் ஏதேனும் ஒன்றை பெற்றுள்ள தாய்மாராக இருக்க வேண்டும்:

  • e-KYC பதிவு செய்யப்பட்ட ஆதார் அட்டை
  • குடியிருப்பு சான்றிதழ்
  • வாக்காளர் அடையாள அட்டை
  • குடும்ப அட்டை
  • தொழிலாளர் நல வாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை
  • அஞ்சல் துறையால் வழங்கப்பட்ட முகவரிச் சான்றிதழ்

 

வேலூர் மாவட்டத்தில் தங்க மோதிரம் வழங்கும் நாள் மற்றும் பகுதிகள்

 

வ.எண்

தேதி

வேலூர் அரசு பென்ட்லேண்ட உயர் சிறப்பு மருத்துவமனை -  வட்டாரங்கள்

குடியாத்தம் அரசு மருத்துவமனை – வட்டாரங்கள்

1

28.09.2026

வேலூர் மாநகராட்சி & ஊசூர்,

குடியாத்தம் & பேர்ணாம்பட்டு

2

29.09.2026

வேலூர் மாநகராட்சி & அணைக்கட்டு

குடியாத்தம் & கே.வி.குப்பம்

3

30.09.2026

வேலூர் மாநகராட்சி & காட்பாடி

குடியாத்தம் & பேர்ணாம்பட்டு

4

01.10.2026

வேலூர் மாநகராட்சி, ஊசூர் & கணியம்பாடி

குடியாத்தம்

5

03.10.2026

வேலூர் மாநகராட்சி&காட்பாடி

பேர்ணாம்பட்டு

6

05.10.2026

வேலூர் மாநகராட்சி

குடியாத்தம்

7

06.10.2026

அணைக்கட்டு

பேர்ணாம்பட்டு

8

07.10.2026

ஊசூர்&கணியம்பாடி

கே.வி.குப்பம்

9

08.10.2026

காட்பாடி

குடியாத்தம்

10

09.10.2026

வேலூர் மாநகராட்சி

பேர்ணாம்பட்டு

11

10.10.2026

அணைக்கட்டு

கே.வி.குப்பம்

12

12.10.2026

ஊசூர்&கணியம்பாடி

குடியாத்தம்

13

13.10.2026

அணைக்கட்டு

பேர்ணாம்பட்டு

14

14.10.2026

வேலூர் மாநகராட்சி

குடியாத்தம்

15

15.10.2026

காட்பாடி

கே.வி.குப்பம்

16

16.10.2026

வேலூர் மாநகராட்சி

பேர்ணாம்பட்டு

17

17.10.2026

அணைக்கட்டு

குடியாத்தம்

18

21.10.2026

வேலூர் மாநகராட்சி

குடியாத்தம்&பேர்ணாம்பட்டு

19

22.10.2026

அணைக்கட்டு

குடியாத்தம்

20

23.10.2026

அணைக்கட்டு

--

21

24.10.2026

அணைக்கட்டு

--

பயனாளிகளின் வசதிக்காக, அந்தந்த பகுதிகளில் இருந்து வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்க மோதிரம் காலை 10.00 மணி மற்றும் மதியம் 1.00 மணி என இரு வேளைகளில் வழங்கப்படும். இதற்கான அழைப்பிதழ்கள் அந்தந்தப் பகுதி கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்படும். அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் மட்டும் பயனாளிகள் வருகை தருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மேலும், இதுகுறித்த சந்தேகங்களுக்கு 9488159374 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சி ஆணையாளர் அ.கேத்ரின்சரண்யா, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் மு.ம.வினோத் கண்ணன், காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் மரு.ம.சுதாகர், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.விஜய் சந்திரன், அரசு வேலூர் மருத்துவ கல்லூரி  மற்றும் மருத்துவமனை முதல்வர் மரு.முத்துசித்ரா  உட்பட பலர் கலந்து கொண்டனர். 

 

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.