• சைகை மொழியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி.

  • வேலூர் மாவட்டத்தில் இந்திய சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காது கேளாதோர் தினம் முன்னிட்டு சைகை மொழியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி - மாவட்ட ஆட்சி தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டத்தில் இந்திய சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காது கேளாதோர் தினத்தை முன்னிட்டு சைகை மொழியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணியை வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் ஆட்சியர்  அலுவலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

செவித்திறன் குறைபாடு உடைய மாற்று திறனாளிகளின் இந்திய சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காதுகேளாதோர் தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 23-ம் நாளன்று சிறப்பிக்கப்படுகிறது. அதனையொட்டி ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரை காது கேளாதோர் மற்றும் சைகை மொழி வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் செவித்திறன் குறைபாடுடைய மாற்று திறனாளிகளின் அடிப்படையான மற்றும் அன்றாட தேவைகளை புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான சைகை மொழி கற்றுக் கொள்ளுதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் மாவட்ட ஆட்சி தலைவர் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி  வைத்தார்.

இப்பேரணியில் வேலூர் மாவட்ட காது கேளாதோர் சிறப்பு பள்ளி மாணவர்கள் மற்றும் காது கேளாதோர் தொண்டு நிறுவன மாற்று திறனாளிகள் மற்றும் இதர வகை மாற்று திறனாளிகள் மற்றும் சமூக பணிகள் கல்வி பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து.சுரேஷ், மாவட்ட மாற்று திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சரவணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.