• வேலூர் மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை

 

  • வேலூர் மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  கால்வாய்  தூர்வாரும் பணிகளை வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாநகராட்சி நிக்கல்சன் கால்வாய், கழிவுநீர் பம்பிங் நிலையம், கன்சால்பேட்டை, வள்ளலார் பகுதி, கஸ்பா ஆகிய இடங்களில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சி தலைவர் வேலூர் மாநகராட்சி, நிக்கல்சன் கால்வாயை தூர் வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணியாக கால்வாயை விரைந்து தூர்வாரி முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு  அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, வேலூர் மாநகராட்சி, வசந்தபுரம் பகுதியில் ரூ.6 கோடி மதிப்பில்  கட்டப்பட்டு வரும் கழிவுநீர் பம்பிங் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாநகராட்சி, கன்சால்பேட்டை பகுதியில் மழைநீர் வடிகால்வாய் தூர்வாரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கால்வாயில் உள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளை  விரைவாக தூர்வாரி அகற்ற சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், வேலூர் மாநகராட்சி, வள்ளலார், இ.பி. நகரில் மழைநீர் வடிகால்வாய்  தூர்வாரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து, வேலூர் மாநகராட்சி, கஸ்பா பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் டெங்கு  குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், சுற்றுப்புறத்தில் நீர் தேங்காதவாறு தூய்மையாக பராமரிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் அ.கேத்திரின் சரண்யா,  நீர்வள துறை செயற்பொறியாளர் சோபனா, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் கண்ணன், மாநகர நல அலுவலர் மரு.பிரதாப்குமார்,  வேலூர் வட்டாட்சியர் உதயகுமார்  உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.