• SSS Pension ஆதார் பண பரிவர்த்தனை முறை.

·        மத்திய அரசின் திட்டங்களின்கீழ் வழங்கப்படும் சமூகப் பாதுகாப்பு திட்ட உதவி தொகை (SSS Pension) இனி ஆதார் அடிப்படையிலான பண பரிவர்த்தனை முறையில் (Aadhaar Based Payment) மட்டுமே வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என வேலுார் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் திட்டங்களின்கீழ் வழங்கப்படும் சமூக பாதுகாப்பு திட்ட உதவித தொகை (SSS Pension) இனி ஆதார் அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை முறையில் (Aadhaar Based Payment) மட்டுமே வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, வேலுார் மாவட்டத்தில் பெரும்பாலான சமூக பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு ஆதார் அடிப்படையிலான முறையில் இம்மாத உதவி தொகை ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. எனினும், சில பயனாளிகளின் ஆதார் எண் வங்கி கணக்குடன் முறையாக இணைக்கப்படாததால், அவர்களுக்கான உதவி தொகையை அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே, இம்மாத சமூக பாதுகாப்பு திட்ட உதவி தொகை பெறாத பயனாளிகள் தங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் முறையாக இணைத்து (Aadhaar Seeding) கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இதற்காக சம்பந்தப்பட்ட வங்கி கிளையை அணுகி, தங்களது வங்கி கணக்கில் ஆதார் இணைப்பை உறுதி செய்து கொள்ளலாம்.

மேலும், பயனாளிகளுக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் உதவிகளை வழங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகம் மற்றும் அனைத்து சமூக பாதுகாப்பு திட்ட தனிவட்டாட்சியர் அலுவலகங்களிலும் உதவி மையங்கள் (Help Desk) அமைக்கப்பட்டுள்ளன.

எனவே, ஆதார் இணைப்பு தொடர்பாக ஏதேனும் சிரமம் அல்லது சந்தேகம் ஏற்பட்டால், பயனாளிகள் மேற்கண்ட உதவி மையங்களை அணுகி தேவையான உதவிகளை பெற்று கொள்ளலாம்.

ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு விவரங்கள் முறையாக பதிவு செய்யப்பட்ட அனைத்து தகுதியான பயனாளிகளுக்கும் உதவி தொகை உரிய முறையில் அனுப்பி வைக்கப்படும்.

சமூக பாதுகாப்பு திட்ட பயனாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது ஆதார்–வங்கி கணக்கு இணைப்பை சரி பார்த்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என வேலுார் மாவட்ட ஆட்சியர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.