• வேலூர் 15 கலைஞர்கள் "கலை விருது"க்கு தேர்வு .

  • வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 15 கலைஞர்கள் மாவட்ட கலை விருதுக்கு தேர்வு .

தமிழகத்தின் கலைகளை மேம்படுத்தவும், கலைஞர்களின் கலை திறனை சிறப்பிக்கும் வகையில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான வேலூர் மாவட்டக் கலை மன்றக் கூட்டம் 30.09.2026 அன்று மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலை பண்பாட்டு துறையின் காஞ்சிபுரம் மண்டல உதவி இயக்குநர், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை), செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர் மாவட்ட சுற்றுலா அலுவலர், கலைமாமணி T.G. ரத்தினம், கலைச்சுடர்மணி ஆ.தனபால், கலைச்சுடர்மணி ப.மகாலட்சுமி ஆகியோர்கள் கலந்து கொண்டு விருதாளர்களைத் தெரிவு செய்தனர்.

கலை முதுமணி விருதுக்கு வேலூர் எம்.பி.பாலு (கரகாட்ட விகட கலைஞர்), திருவலம் டி.எம்.ஜெகதீசன் (தவில் கலைஞர்), சின்னகீசகுப்பம் மு.கங்காதரன் (நாடக கலைஞர்), கலை நன்மணி விருதுக்கு எஸ்.ஜி.ஆனந்தன் (நையாண்டி மேளக் கலைஞர்), வேலூர் வி.கே.உமாபதி (சிற்பக் கலைஞர்), சின்னராஜா குப்பம் ஆர்.எஸ்.மகாலிங்கம் (தவில் கலைஞர்), கலைச்சுடர்மணி விருதுக்கு சத்துவாச்சாரி வி.செல்வகணபதி (ஓவியக் கலைஞர்), அரியூர் பா.வெங்கடேசன் (பம்பை கலைஞர்), வேங்குப்பம் எம்.சுரேஷ் (நாதஸ்வரக் கலைஞர்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கலை வளர்மணி விருதுக்கு சலவன்பேட்டை கா.நித்யா (பரதநாட்டியக் கலைஞர்), பிச்சனூர் செ.அஜித்குமார் (சிலம்பாட்டக் கலைஞர்), வேலூர் ஜெ.பிரசாந்த் பாலாஜி (மிருதங்கக் கலைஞர்), கலை இளமணி விருதுக்கு செல்வி. கோ.மகாலட்சுமி (பரதநாட்டியம்), செல்வி. மோ.வை.யாழினி (சிலம்பாட்டம்), செல்வி. சு.மிருத்திகாஸ்ரீ (குரலிசை) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.