• கைப்பேசி பழுது பார்ப்பு இலவச 30 நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி.

  • வேலூர் மாவட்டத்தில் MSME DFO சென்னை மற்றும் VIT வேலூர் இணைந்து நடத்தும்  கைப்பேசி பழுது பார்ப்பு இலவச 30 நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.            

​            வேலூர், தமிழ்நாடு: இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சகம் (MSME), சென்னை MSME வளர்ச்சி  மற்றும் உதவி அலுவலகம் (DFO), வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (VIT) மற்றும் நூன் கம்ப்யூட்டர்ஸ் (Noon Computers) ஆகியவற்றுடன் இணைந்து, கைப்பேசி சேவை மற்றும் பழுதுபார்த்தல் குறித்த 30 நாள் தொழில் முனைவோர்-cum-திறன் மேம்பாட்டு பயிற்சியை (ESDP) ஏற்பாடு செய்துள்ளது. இப்பயிற்சி 2026 நவம்பர் 3 ஆம் தேதி அன்று VIT வேலூர் வளாகத்தில் தொடங்குகிறது.

​மொபைல் ஹார்டுவேர், சோல்டரிங் (soldering) மற்றும் PCB பற்றிய அடிப்படையான விஷயங்கள், மென்பொருள் ப்ளாஷிங் (software flashing), பழுது கண்டறிதல் மற்றும்  பழுது நீக்குதல், ஆகியவற்றில் பங்கேற்பாளர்களுக்கு கற்றுத் தருவதே இப்பயிற்சியின்  நோக்கம்.   மேலும், சுயதொழில் முயற்சியாக  மொபைல் பழுதுபார்க்கும்  வணிகத்தைத் தொடங்குவது பற்றியும், அரசுத் திட்டங்கள் மற்றும் நிதி உதவி குறித்த வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.

​            இப்பயிற்சிக்கு கட்டணம் கிடையாது. 18 முதல் 55 வயதுக்கு உட்பட்ட, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். முன்பதிவு செய்ய முன்னனுபவம் தேவையில்லை. பெண்கள் மற்றும் SC/ST விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

​            ஆர்வம் உள்ளவர்கள்  QR குறியீட்டை ஸ்கேன் செய்து பதிவு செய்து கொள்ளலாம். குறைந்த இடங்களே உள்ளதால் தகுதியானவர்களுக்கே முன்னுரிமை. 

         பதிவு தொடர்பான விவரங்களுக்கு MSME DFO சென்னை துணை இயக்குநர் ரேஷ்மா ராஜீவன், IES அவர்களை 9645450927 / 8015606071 என்ற எண்களிலோ அல்லது reshma.rajeevan@gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.