• மழை வெள்ள பேரிடர் - தீயணைப்பு துறையினர் ஒத்திகை.


 ·         மழை வெள்ள பேரிடர் காலங்களில் பாதுகாப்பு கருவிகளை பயன்படுத்தி இடர்பாடுகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு துறையினர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒத்திகை

         வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் தலைமையில் மழை வெள்ளங்களிலும் கட்டிட இடிபாடுகளிலும் சிக்கியவர்களை மீட்பது குறித்து வேலூர் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

     இதில் மழை வெள்ளங்களிலிருந்து மக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்து கொள்வது, மேலும் மரங்களை மரம் வெட்டும் கருவி மூலம் எவ்வாறு வெட்டி அகற்றி கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது காற்று குறைவான பகுதிகளில் ஆக்சிஜன் செலுத்தி மக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி வடிவேல் மக்களுக்கு விளக்கி கூறினார். இதனை திரளான பொதுமக்கள் பார்த்து பயனடைந்தனர்

 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.