• வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி.
· வேலூர் கோட்டை ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி.
· விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், வெள்ளிகவசம் அணிவித்து மகாதீபாராதனை.
வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு தேன், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களை செய்தனர்.
விநாயகருக்கு அருகம்புல், மலர் மாலைகளால் அலங்காரங்களை செய்து வெள்ளி கவசங்களை அணிவித்து மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் மேளதாளங்கள் முழங்க சுவாமி உட்பிரகார உலாவும் வந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Comments
Post a Comment